பெட்ரூமில் இருந்து குத்தாட்டம் போடும் ஆல்யா மானசா: வைரலாகும் ரீல்ஸ் வீடியோ
சீரியல் நடிகையான ஆல்யா மானசா பெட்ரூமில் வைத்து ரீல்ஸ் செய்து போட்டிருக்கிறார் இது இணையத்தை அதிகம் வைரலாகி வருகிறது.
ஆல்யா மானசா
சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார். அதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார்.
அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார். இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
வைரல் வீடியோ
ஆல்யா மானசா தற்போது வேறு ஒரு சேனலில் புது சீரியலில் நடித்து வருகிறார். இந்நிலையில் அவர் பெட்ரூமில் இருந்துக் கொண்டு குத்தாட்டம் போடும் வீடியோ ஒன்று இணையத்தை கலக்கி வருகிறது.
இரண்டு குழந்தைகளைப் பெற்றும் இன்னும் அப்படியே 16 வயது பெண் போலவே இருக்கிறார் என அவரது ரசிகர்கள் கமெண்டு செய்து வருகிறார்கள்.