ஜிவி பிரகாஷ்- சைந்தவி ஓரங்கட்டிய தம்பதி.. விவாகரத்து பின்னும் வாழ்க்கை- நளினி ஓபன் டாக்
விவாகரத்து பின்னும் வாழ்க்கை இருக்கிறது என்பதற்கு ஜிவி பிரகாஷ்- சைந்தவி உதாரணமாக இருப்பது போன்று 80ஸ் நடிகையொருவர் தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பகிர்ந்த விடயங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கப்பட்டு வருகிறது.
நடிகை நளினி
தமிழ் சினிமாவில் விஜயகாந்த், அர்ஜூன், ராமராஜன் ஆகியோருக்கு ஜோடியாக நடித்து பிரபலமான நடிகையாக இருந்தவர் தான் நடிகை நளினி.
இவர், தற்போது காமெடி நடிகர்களுடன் இணைந்து காமெடி நாயகியாக நடித்து வருகிறார். வடிவேலுவுடன் இணைந்து நடித்த காமெடி இன்றும் மீம்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
கடந்த 1980ம் ஆண்டு திரைக்கு வந்த “ஒத்தையடி பாதையிலே” என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். ஆரம்பத்தில் சில படங்கள் நடித்தவர் அதன்பிறகு நிற்கவே நேரம் இல்லாமல் படு பிஸியான நடிகையாக மாறினார்.
தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஏராளமான படங்கள் நடித்திருக்கிறார். வெள்ளித்திரையில் வாய்ப்பு குறைவாக இருக்கும் பொழுது சின்னத்திரையிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.
நானும் தவறு செய்தேன்..
இந்த நிலையில், நடிகை நளினி-ராமராஜன் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். ஆனால் இருவரும் சில காரணங்களால் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர்.
சமீபத்தில் ஒரு பேட்டியில் நடிகை நளினி கூறுகையில், “விவாகரத்திற்கு பிறகு என்னுடைய குழந்தைகளை வளர்க்க பல கஷ்டங்களை அனுபவித்தேன். என்னுடைய கணவர் என்னை விட்டு பிரிந்த பின்னரும் குழந்தைகளுக்கு செய்ய வேண்டியதை செய்தார்.
இன்று அவர் என்னை விட்டு பிரிந்து விட்டார் என்பதற்காக அவர் என்னுடையவர் அல்ல என்பது இல்லை. நானும் வாழ்க்கையில் சில தவறுகள் செய்திருக்கிறேன். அதற்காக அவர் மீது பழியை போடுவதற்கு விருப்பம் இல்லை. யாரும் விவாகரத்துக்கு பின்னர் அவர்களுடைய கடமைகளை செய்வது இல்லை. ஆனால் என்னுடையவர் செய்கிறார்...” என விவாகரத்துக்கு பின்னர் எப்படி ஒரு தம்பதி இருக்க வேண்டும் என்பதற்கு சரியான பதில் கொடுத்திருக்கிறார்.
சமீபக்காலமாக பிரபலங்களின் விவாகரத்து செய்தியை அதிகமாக காணலாம். ஆனால் விவாகரத்துக்கு பின்னர் தன்னுடைய துணையை அசிங்கப்படுத்தி சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் ஜிவி பிரகாஷ்- சைந்தவி அவற்றிற்கு முற்றிலும் வேறுப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.
தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும், வேலைக்கும் தொடர்பு இல்லை என இருவரும் தற்போது அடிக்கடி இணைந்து வேலைப் பார்த்து கொண்டிருக்கிறார்கள். அப்படியொரு காணொளியும் கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் வைரலாகின.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |