Red Spots on Skin: சருமத்தில் தோன்றும் சிவப்பு புள்ளிகள் ஆபத்தானதா? மருத்துவ விளக்கம்
பொதுவாகவே சருமத்தில் ஏற்படுகின்ற மாற்றங்களுக்கும் உடல் ஆரோக்கிய பிரச்சினைகளுக்கும் இடையில் நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
அந்தவகையில் மருத்துவ ரீதியாக நோக்கும் போது தோலில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள் தீங்கற்றவை முதல் தீவிரமான ஆரோக்கிய பிரச்சினைகள் வரையில் பல்வேறு காரணங்களுக்காக தோன்றலாம்.இது குறித்து அவதானமாக இருக்க வேண்டியது அவசியம்.
சருமத்தில் ஏற்படும் இவ்வாறான சிவப்பு புள்ளிகள் தோல் அழற்சி, ரிங்வோர்ம் போன்ற தொற்றுகள் அல்லது பர்புரா எனப்படும் இரத்த நாளங்களின் சிறிய வெடிப்புகளால் கூட ஏற்படலாம். இது குறித்த விரிவான விளக்கத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
சில சந்தர்ப்பங்களில், சிவப்பு புள்ளிகள் ஒவ்வாமை போன்ற சாதாரண பிரச்சினையாகவும், சில சமயங்களில் தோல் புற்றுநோய் போன்ற உயிர்கொல்லி நோய்களின் முக்கிய அறிகுறியாகவும் அறியப்படுகின்றது.
எனவே அசாதாரணமான அல்லது தொடர்ச்சியான சிவப்பு புள்ளிகளை நீங்கள் கவனித்தால், காரணத்தைக் கண்டறிந்து சரியான சிகிச்சையைப் பெற வேண்டியது அவசியம்.
முக்கிய காரணங்கள் என்ன?
வெப்பத் தடிப்பு (மிலேரியா)
சூரிய ஒளியில் அதிக நேரம் இருந்தன் பின்னர் இவ்வாறு தோலில் சிவப்பு புள்ளிகள் ஏற்படுவது"வெப்பத் தடிப்பு" என்று அழைக்கப்படும். சருமத்தின் கீழ் வியர்வை சுரப்பிகள் அடைக்கப்படும்போது வெப்பத் தடிப்பு (மிலேரியா) ஏற்படுகின்றது என மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.
செர்ரி ஆஞ்சியோமாஸ்
சில நேரங்களில் தோலில் சிவப்பு அல்லது நிறமாற்றம் ஏற்பட்ட புள்ளிகள் செர்ரி ஆஞ்சியோமாவாக அல்லது செர்ரி ஹெமாஞ்சியோமாவாக இருக்கலாம். இது இரத்த நாளங்களால் ஆன வட்டமான சிவப்பு அல்லது ஊதா நிற புள்ளியாகத் தோன்றும்.
அவை ஆபத்தானவை அல்ல ஒரு வளச்சியடையும் கட்டியாக இருக்கலாம். 30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது வந்தவர்களில் செர்ரி ஆஞ்சியோமாக்கள் பொதுவானவை. ஆனால் நிச்சயம் சிகிச்சை பெற வேண்டியது அவசியம்.
தொடர்பு தோல் அழற்சி
ஒரு நபர் தனது சருமத்தை எரிச்சலூட்டும் அல்லது ஒவ்வாமை எதிர்வினையைத் தூண்டும் ஒரு பொருளுடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்ளும்போது தோல் அழற்சி ஏற்படுகிறது. தூண்டுதல் மற்றும் எதிர்வினையின் தீவிரத்தைப் பொறுத்து அதன் அறிகுறிகள் மாறுபட கூடும். ஆனால் சருமத்தில் ஏற்படும் திடீர் சிவப்பு புள்ளிகளுக்கு இது முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.
தொற்றுகள்
சில தொற்றுகள் தோலில் சிவப்பு அல்லது சுற்றியுள்ள தோலின் அதே நிறத்தில் புள்ளிகள் தோன்ற காரணமாக இருக்கலாம்.தொற்று ஏற்படுட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் பட்சத்தில் மருவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.
சின்னம்மை அல்லது ஷிங்கிள்ஸ்
சின்னம்மை பொதுவாக குழந்தைகள் மற்றும் சிறு குழந்தைகளில் ஏற்படுகிறது. இருப்பினும், இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களுக்கும் சின்னம்மை ஏற்படலாம்.
இந்த நோய்த்தொற்றுகளை வெரிசெல்லா-ஜோஸ்டர் எனப்படும் வைரஸ் ஏற்படுத்துகிறது. அவை வீக்கம், அரிப்பு, திரவம் நிறைந்த கொப்புளங்களை போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும். சருமத்தில் ஏற்படும் சிவப்பு புள்ளிகள் சின்னம்மை தொற்றா என்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
பூச்சி கடி
கொசு கடித்தல், பிளே கடித்தல் அல்லது தேனீ கொட்டுதல் ஆகியவை தோலில் உள்ளூர் சிவப்பு, வீங்கிய புடைப்புகளை ஏற்படுத்தும்.இதுவும் சிவப்பு புள்ளிகள் தோன்ற காரணமாக அமையலாம்.இது தவிர பல்வேறு உடல் ஆரோக்கிய பிரச்சினைகளின் முக்கிய அறிகுறியாகவும் சருமத்தில் சிவப்ப புள்ளிகள் தோன்றலாம். எனவே இதனை அலட்சியப்படுத்துவது முற்றிலும் தவறு.
மேலும் தீங்கு விளைவிக்க கூடிய சூரியக் கதிர்களிலிருந்து (UV கதிர்கள்) உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சன்ஸ்கிரீன் மற்றும் பாதுகாப்பு ஆடைகளைப் பயன்படுத்த வேண்டும். எதிர்வினையைத் தூண்டக்கூடிய அறியப்பட்ட ஒவ்வாமை அல்லது எரிச்சலைத் உணரும் பட்சத்தில் மருத்துவ நிபுணரை அணுகி ஆலோசனை பெறுவதே சிறந்தது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |