விபத்தில் சிக்கிய ஆல்யா மானசா! அதிர்ச்சியில் ரசிகர்கள்
பிரபல சீரியல் நடிகை ஆல்யா விபத்தில் சிக்கி காலில் கட்டுப்போட்டுள்ள காட்சியினை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
நடிகை ஆல்யா மானசா
பிரபல ரிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான ஆல்யா, அதில் கதாநாயகனாக நடித்த நடிகர் சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் என இரண்டு குழந்தைகள் இருக்கின்றது. இந்நிலையில் தற்போது விஜய் டிவியிலிருந்து சன் டிவிக்கு மாறிய இவர், அதில் இனியா என்ற நாடகத்தில் நடித்து வருகின்றார்.
இந்நிலையில் தனது காலில் கட்டு போட்டு இருக்கும் காட்சியினை தனது இன்ஸ்டா ஸ்டோரியில் வெளியிட்டுள்ளார்.
விபத்து எப்படி நடந்தது?
ஆல்யா மானசா எந்த நேரமும் துருதுருவென இருக்கும் நிலையில் இவருக்கு எவ்வாறு இப்படி விபத்து ஏற்பட்டுள்ளது என்ற கேள்வியினை ரசிகர்கள் முன் வைக்கின்றனர்.
ஆம் ஆல்யா தனக்கு விபத்து ஏற்பட்டு காலில் கட்டு போட்டுள்ளதை மட்டுமே காட்டியுள்ள நிலையில், விபத்திற்கான காரணத்தினை அவர் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.