இப்படித் தான் சஞ்சீவ் மீது காதல் வந்தது: மனம் திறந்த ஆல்யா மானசா
சீரியல் நடிகை ஆல்யா மானசா முதன்முறையாக தனது காதல் பற்றியும் காதல் கணவர் பற்றியும் ஓபனாக பேசியிருக்கிறார்.
ஆல்யா மானசா
சீரியலில் பிரபல நடிகைக்கு இணையாக பார்க்கப்படுவர் தான் ஆல்யா மானசா. இவருக்கு என்றே ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இவர் மானாட மயிலாட என்ற நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி பிரபலமானார். அதற்குப் பிறகு பிரபல தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியல் மூலம் அறிமுகமானார்.
அதில் தனது இயல்பான நடிப்பால் அதிகம் பிரபல்யமானார். இவர் அதே சீரியலில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், தற்போது இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
இது தான் காரணம்
ஆல்யா மானாசா மாடலிங் செய்யும் போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் சஞ்சீவை பார்த்த ஆல்யா மானசா சைட் அடித்திருக்கிறார். ஆனால் சஞ்சிவ் இடம் பேசும் போது கூட அண்ணா என தான் பேசிவாராம்.
இந்தச் சந்தர்ப்பத்தில் தான் ராஜா ராணி சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாகியிருக்கிறார் சஞ்சீவ் . அப்போதும் சஞ்சீவை பார்த்து அசடு வழிந்த ஆல்யா, சீரியலில் நடித்துக் கொண்டிருந்த காலக்கட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட புரிதல், விட்டுக்கொடுக்கும் தன்மையால் எங்களுக்குள் காதல் மலர்ந்தது.
இப்போது திருமணமே நடந்திருந்தாலும் நாங்கள் காதலித்து கொண்டுதான் இருக்கிறோம் என்று ஆல்யா கூறியுள்ளார்.