2 பிள்ளைகள் பெற்றாலும் தேவதையாய் மின்னும் ஆல்யா மானசாவின் Beauty Secrets
சின்னத்திரை ரசிகர்களில் ஆல்யா மானஸாவை தெரியாத யாருமே இருக்க முடியாது, இவர் மானாட மயிலாட நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தி பின் ராஜா ராணி சீரியலில் நடித்து பிரபலமானவர்.
அதில் தன்னுடன் நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார், இவர்களுக்கு அய்லா என்ற மகளும், அர்ஷ் என்ற மகனும் இருக்கின்றனர்.
தற்போதும் உடல் எடையை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதுடன் கதாநாயகியாக அசத்தி வருகிறார்.
இவரது அழகின் ரகசியம் பற்றி பேசுகையில்,
எப்பொழுது வெளியே சென்று வந்தாலும் முகத்தில் தூசு படிந்துவிடும், அத்தோடு இருக்காமல் உடனே முகம் கழுவுதல் நல்லது. ஒரு நாளைக்கு 2 அல்லது 3 தடவையாவது முகம் கழுவி விடுவாராம்.
ஒரு மனிதன் குறைந்தது 6 முதல் 8 டம்ளர் தண்ணீர் அருந்த வேண்டுமாம், இதை தவறாமல் கடைபிடித்து வருகிறார் ஆல்யா.
அத்துடன் அதிகளவு மீன் எடுத்துக்கொள்வதும் தன்னுடைய முக பொலிவிற்கு காரணம் என தெரிவித்துள்ளார்.