கால் உடைந்த ஆல்யாவா இது? சேலையில் வெறித்தனமாக மாஸ் காட்டிய காட்சி
வாரிசு திரைப்பட பாடலுக்கு சேலையில் டான்ஸ் ஆடி ராஷ்மிகா மந்தனாவை தெறிக்கவிட்ட ஆல்யா மானசாவின் நடன வீடியோ இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சின்னத்திரை எப்படி வந்தார் தெரியுமா?
பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி முதல் சீசன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.
இவரின் நடிப்பை ஒரே சீரியலில் காட்டி அத்தனை இல்லத்தரிசிகளையும் கட்டுக்குள் இழுத்து விட்டார். அந்தளவு வசிக்கரிக்கும் பார்வை கொண்டவர் ஆல்யா. இந்த தொடரில் இவருக்கு ஜோடியாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
தற்போது இவருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கிறார்கள். தொடர்ந்து இவரது மகன் பிறந்ததுக்கு பிறகு சின்னத்திரையை விட்டுவிலகுவதாக அறிவித்த அவர், தற்போது சன் டிவியின் புதிய சீரியலில் நடித்து வருகிறார்கள்.
டான்ஸில் ராஷ்மிகாவுக்கே டப் கொடுக்கும் ஆல்யா
இந்த நிலையில் நடிகை ஆல்யா மானசா சஞ்சீவ் கார்த்திக் இருவரும் இணைந்து சொந்தமாக யூடியூப் சேனலொன்றை நடத்தி வருகிறார்கள்.
இந்த யூடியூப் சேனலில் அவர் வீட்டில் நடக்கும் முக்கிய நிகழ்வுகள், குழந்தைகளுடன் இருக்கும் நேரங்கள் என அனைத்து விடயங்களையும் வீடியோவாக எடுத்து பகிர்வார்கள். இதனை தொடர்ந்து இவரின் இன்ஸ்டா பக்கத்திலும் ஆல்யா செய்யும் ரீல்ஸ் வீடியோக்காட்சியும் பகிர்ந்து வருகிறார்.
இதன்படி, வாரிசு திரைப்பட பாடலுக்கு அசல் ராஷ்மிகா போல் நடனம் ஆடியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி சமூக வலைத்தளப்பக்கங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், “காலில் பென்டேஜ்வுடன் இருந்து விட்டு இப்போ இப்படி கலக்கிறீங்க ஆல்யா” என கமண்ட் செய்து வருகிறார்கள்.