மகன் பிறந்த சில நாட்களில் ஆல்யாவின் கணவருக்கு அடித்த அதிர்ஷ்டம்!
சின்னத்திரையின் நட்சத்திர தம்பதிகளான ஆல்யா மானசா- சஞ்சீவ் தம்பதியினருக்கு சில நாட்களுக்கு முன் அழகான ஆண் குழந்தை பிறந்தது.
சீரியல் ஜோடி டூ ரியல் ஜோடி
ராஜா ராணி தொடர் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா, இவர் ஒரு சிறந்த டான்ஸரும் கூட.
திருமணத்திற்கு முன் இவரை சுற்றி பல விமர்சனங்கள் இருந்தாலும் சின்னத்திரை மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை என இரண்டிலும் வெற்றிகரமாக வலம்வந்து கொண்டிருக்கிறார்.
ராஜா ராணி சீசன் 1-ல் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
மகளின் பிறந்த நாளை கொண்டாடிய சஞ்சீவ்- ஆல்யா: இணையத்தை கலக்கும் புகைப்படம்!
அழகான குழந்தை
தன்னுடைய பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்தார் ஆல்யா, ஆனால் தன்னுடைய முதல் குழந்தையை வயிற்றில் சுமக்கும் போதே, தன் காதல் மனைவியின் ஆசையை நிறைவேற்றிவைத்தார் சஞ்சீவ்.
அதாவது வளைகாப்பு நிகழ்ச்சியின் போது ஆல்யாவின் பெற்றோர்கள் கலந்து கொண்டார்கள்.
இவர்களுக்கு அய்லா என்ற மகள் இருக்கிறார், அவரது சுட்டித்தனமான சேட்டைகளையும் புகைப்படங்களாக, வீடியோக்களாக ஆல்யா பகிர தவறவில்லை.
தவறு நடந்துருச்சு.. மன்னிச்சிடுங்க? என்ன நடந்தது குக் வித் கோமாளியில்?
இரண்டாவது பரிசு
குழந்தை பெற்றெடுத்த பின் ஆல்யா மானசா 'ராஜா ராணி 2' தொடரில் கதாநாயகியாக நடித்து வந்தார்.
இந்நிலையில் இரண்டாவது முறையாக கர்ப்பமானார், நிறைமாத கர்ப்பிணியாக இருந்த போதும் இத்தொடரில் நடித்து வந்தார் ஆல்யா
அதனை தொடர்ந்து பிரசவம் நெருங்கும் காலம் என்பதால் அண்மையில் 'ராஜா ராணி 2' சீரியலில் இருந்து விலகினார் ஆல்யா.
இந்நிலையில் இவருக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த தகவலை தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதோடு குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்துள்ளார்.
இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது. தங்களின் மகனுக்கு அர்ஷ் என பெயர் வைத்துள்ளனர்.
நோ சொன்ன ஆல்யா- கவலையில் ரசிகர்கள்
குழந்தை பிறந்தவுடன் சில நாட்கள் கழித்து ராஜா ராணி 2 சீரியலுக்கு ஆல்யா வருவார் என ரசிகர்கள் நினைத்திருந்தனர்.
ஆனால் அவரோ இனி என்னால் முடியவே முடியாது. சந்தியாவாக நடிக்க வரவே மாட்டேன் என தெள்ளத் தெளிவாக கூறிவிட்டாராம்.
இதனால் இனி சந்தியா கேரக்டரில் ரியாவே தொடருவார் என கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
பரீனாவின் குழந்தை கருவில் இருந்த போது நடந்த விஷயம்... எமோஷ்னலான அர்ச்சனா!
சன்குடும்ப விருதுகள்
ஆல்யாவின் கணவரான சஞ்சீவ் “கயல்” தொடரில் நடித்து வருகிறார், நடுத்தர குடும்ப பெண் சந்திக்கும் பிரச்சனைகளே கதையின் கரு.
சமீபத்தில் நடந்த சன் குடும்ப விருதுகள் நிகழ்ச்சியில் சஞ்சீவ்வுக்கு “நட்சத்திர நாயகன்” என்ற விருது கொடுக்கப்பட்டுள்ளதாம்.
இத்தகவலை பகிர்ந்துள்ள ஆல்யா, தன் கணவரை நினைத்து குழந்தைகளும் பெருமைப்படுவதாக பதிவிட்டுள்ளார்.
நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் , புகைப்படங்களை பதிவேற்றுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
என்ன ஒரு தைரியம்? வில் ஸ்மித் செயலுக்கு வனிதா என்ன சொல்லியிருக்கார் பாருங்க