glaucoma symptoms: கண் நீர் அழுத்த நோய் ஏன் ஏற்படுகின்றது? அறிகுறிகளும் தீ்ர்வும்
பொதுவாகவே உடல் உறுப்புகளில் கண் மிகவும் இன்றியமையாதது.பிறப்பிலேயே பார்வை இழந்தவர்களை விடவும் நோய் நிலை காரணமாக வாழ்க்கையில் இடைப்பட்ட காலத்தில் பார்வையிழப்பது மிகவும் கொடியது.
பார்வையின்றி நம்மால் எதையும் செய்யமுடியாது. கண்ணில் பார்வை நரம்பு என்பது ஒரு முக்கிய பகுதியாக காப்படுகின்றது.
க்ளௌகோமா
க்ளௌகோமா என்பது பார்வை நரம்பைப் பாதிக்கும் கண் நோய்களின் பட்டியலில் முக்கியமானதாக அறியப்படுகின்றது.
கண்ணின் நீர் அழுத்தம் அதிகமாவதால் அது பார்வை நரம்பை கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து கண் பார்வை இழப்பை ஏற்படுத்தும் அளவுக்கு தீவிர விளைவை ஏற்படுத்துகின்றது.
இதற்கான முன் அறிகுறிகள் இல்லாமல் பார்வை பாதிப்பு அதிகமாக ஆன பிறகே தெரியவரும். இந்த கண் அழுத்த நீர் தான் கிளாகோமா என குறிப்பிடப்படுகின்றது.
ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயை நிலையை கண்டறிந்தால் குணப்படுத்துவற்கும் சிகிச்சை மேற்கொள்வதற்கும் எளிமையாக இருக்கும். ஆனால் அறிகுறிகள் இல்லாத நிலையில் இதை கண்டறிவதும் மிகவும் கடினம் என மருத்துவ நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
அதன் காரணமாகவே 30 வயதை கடந்தவர்கள் வருடத்துக்கு இரண்டு முறையாவது கண் அழுத்த பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டியது அவசியம் இல்லாத போது நிலைமை மோசமாகலாம் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
வொவ்வொரு ஆண்டும் மார்ச் மாதம் 12 ஆம் திகதி உலக குளுகோமா தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. இதன் நோக்கம் குளுக்கோமா குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்பதே ஆகும்.
கண் நீர் அழுத்த நோய்க்கு மருந்துகள், லேசர் சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை கண்ணின் தன்மைகேற்ப மருத்துவரின் ஆலோசனைப்படி செய்யப்படும்.
கிளௌகோமாவின் வகைகள்
கோண-மூடல் கிளௌகோமா
இயல்பான பதற்றம் கிளௌகோமா
திறந்த கோண கிளௌகோமா
குழந்தை கிளௌகோமா
நிறமி கிளௌகோமா ஆகிய 5 வகையான கிளௌகோமா காணப்படுகின்றது.
கிளௌகோமா அறிகுறிகள்
கிளௌகோமாவின் ஆரம்ப கட்டங்களில், பெரும்பாலும் வெளிப்படையான அறிகுறிகள் எதுவும் இல்லை, வழக்கமான கண் பரிசோதனைகள் இல்லாமல் கண்டறிவது சவாலானது.
நோய் நிலை தீவிரமடையும் போது, புற (பக்க) பார்வை படிப்படியாக இழக்கப்படும்.
கண் சிவத்தல் அல்லது வலி விளக்குகளைச் சுற்றி ஒளிவட்டம் அல்லது வானவில் நிற வளையங்கள் போன்றவற்றுடன் சேர்ந்து குமட்டல் அல்லது வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
கண் அழுத்த நோயின் முக்கிய காரணிகள்
பரம்பரைக் காரணிகள்
கிட்டப் பார்வை
தூரப் பார்வை
வயது
கார்டிகோ ஸ்டிராய்டு மருந்துகளை அதிகளவில் எடுத்துக் கொள்ளுதல்
சர்க்கரை நோய்
கண்களில் அடிபடுதல்
சிகிச்சை முறை
கண் நீர் அழுத்தத்தைக் குணப்படுத்த முடியாது. பார்வையிழப்பு ஏற்பட்டிருந்தால் அதை சிகிச்சையால் சரிசெய்து இழந்த பார்வையை மீட்க முடியாது.மேலும் பார்வையிழப்பு ஏற்படாமல் தடுக்க மட்டுமே சிகிச்சையால் முடியும்.
ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை எடுத்துக்கொள்வது அவசியம் என இதனால்தான் மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
கண்களைப் பரிசோதித்த பின்னர் கண் மருத்துவர், நோயின் தீவிரத்தைப் பொறுத்து ,கண் சொட்டுமருந்து, லேசர் சிகிச்சை, அறுவை சிகிச்சை ஆகியவற்றில் சரியானதை மருத்துவர்கள் தெரிவு செய்து சிகிச்சை வழங்குகின்றனர்.
நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோருக்கு வாழ்நாள் முழுவதும் கண் நீர் அழுத்தத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியதும் மருத்துவ ஆலோசனைகளை கேட்டு முறையாக பின்பற்றுவதும் அவசியமாகும்.
![Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்](https://cdn.ibcstack.com/article/e41b08a3-e02b-4259-a3d6-eea6d3a9a943/24-6765442bbf32b-sm.webp)
Alzheimer's disease symptoms: அல்சைமர் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்? முழுமையான மருத்துவ விளக்கம்
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |