என்ன ஒரு தைரியம்? வில் ஸ்மித் செயலுக்கு வனிதா என்ன சொல்லியிருக்கார் பாருங்க
ஆஸ்கர் விருது விழாவில் தொகுப்பாளரை வில் ஸ்மித் ஓங்கி அறைந்ததை வரவேற்ற நடிகை வனிதா விஜயகுமார் பெருமை கொள்வதாக பதில் அளித்துள்ளார்.
ஆஸ்கர் விழாவில் அசம்பாவிதம்
உலக சினிமா கலைஞர்களை கவுரவிக்கும் 94 ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா இரு தினங்களுக்கு முன்பு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது.
இந்த விழாவை தொகுத்து வழங்கிவந்த கிறிஸ் ராக் திடீரென அங்கிருந்த வில் ஸ்மித்தின் மனைவி ஜடா பிங்கெட்டின் தலையில் முடி இல்லாமல் மொட்டை அடித்ததைப் பார்த்து கிண்டல் செய்த நிலையில், முதலில் சிரித்துக்கொண்டிருந்த வில் ஸ்மித் திடீரென கோபத்தில் மேடைக்கு வந்து பளார் என கன்னத்தில் அறைந்தார்.
சமீபத்தில் உடல்நலக் குறைவு காரணமாக ஜடா பிங்கெட் தலைமுடியை இழந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
19 வயதில் தங்கச்சி பாப்பா!! பிரபல நடிகை வீட்டில் நடந்த விசேஷம்
கண்ணீர் மல்க கேட்ட மன்னிப்பு
பின்பு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருதினை பெற மேடைக்கு சென்ற வில் ஸ்மித், கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டதுடன் தனது இன்ஸ்டா பக்கத்திலும் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு பதிவு ஒன்றினையும் வெளியிட்டிருந்தார்.
மனைவி மீது வைத்த அளவுகடந்த காதல் வில் ஸ்மித்தின் இந்த கோபத்திற்கு காரணமாக அமைந்துள்ளது. மற்றொரு புறம் வில் ஸ்மித் பெற்ற ஆஸ்கர் விருது பறிக்கப்படுமா? என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
வில் ஸ்மித்திற்கு வனிதா பதில்
வில் ஸ்மித்தின் செயலை விட அவர் மன்னிப்பு கேட்டதை நிறைய பேர் பாராட்டி வரும் நிலையில், வனிதா விஜயகுமாரும் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் வில் ஸ்மித்தின் பதிவை பகிர்ந்து, "தனது மனைவியை காக்கும் தைரியம். அது போல தனது தவறை ஒப்புக் கொள்ளும் பண்பு... நான் உங்களின் மிகப் பெரிய ரசிகையாக இருப்பதில் பெருமைப்படுகிறேன் வில் ஸ்மித்" என கூறியுள்ளார்.