தண்ணீர் பட்டாலே அலர்ஜி... அரிய நோயால் பாதிக்கப்பட்ட 25 வயது பெண்!
தண்ணீரால் ஏற்படும் அரியவகை ஒவ்வாமையால் அவதிப்படுவதாக பிரித்தானியாவைச் சேர்ந்த கெண்டல் என்ற 25 வயதுடைய பெண் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.குறித்த விடயம் தங்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
உயிர் வாழ அடிப்படைத் தேவை நீர். ஆனால், தண்ணீர் பட்டாலே அலர்ஜி இருந்தால் என்ன செய்வது?
இந்த அரியவகை ஒவ்வாமையால் இந்தப் பெண் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மாத்திரமே குளிக்கிறார் என்பதுடன், தான் சாதரணமாக தண்ணீரில் கை கழுவினாலும் வலி மற்றும் எரிச்சலால் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.
உலகம் முழுவதும் இதுவரையில் இந்த அரிய நோயால் 50 முதல் 100 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளதாக நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹெல்த் குறிப்பிடுகின்றது.
இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |