Ajwain Seeds: கொலஸ்ட்ரால் பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும் ஓம விதைகள்
பொதுவாக உடல் சீராக செயற்படுவதற்கும் சரும பாதுகாப்பிற்கும் என பல விஷயங்களுக்கு கொலஸ்ட்ரால் என்னும் கொழுப்பு அத்தியாவசியமான சத்துப் பொருளாக பார்க்கப்படுகின்றது
ஆனால் இது உடலில் மிகுதியாக இருக்கும் போது பல்வேறு உடல்நல பிரச்சினைகளைக் தோற்றுவிப்பது மட்டுமல்லாது, இறுதியாக உயிரிழப்பை கூட ஏற்படும் அளவுக்கு அகாயகரமானது.
அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் ரத்த நாளங்களில் அது படியத் தொடங்கும். சில சமயம், இந்த படிமங்கள் உடைந்து, கட்டியாக மாறும் பட்சத்தில் மாரடைப்பு அல்லது ஸ்டிரோக் போன்ற அபாயகரமான பிரச்சனைகளை தோற்றுவிக்கும்.
அதன் காரணமாகத்தான் உடலில் கொழுப்பின் அளவை சீரான அளவில் வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகின்றது. அந்த வகையில் உடலில் கொழுபின் அளவை கட்டுக்குள் வைக்க துணைப்புரியும் ஓமத்தை எப்படி பயனுள்ள வகையில் உபயோகிக்கலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கொலஸ்டிரால் என்றால் என்ன?
பொதுவாக கொலஸ்டிரால் எனப்படுவது உடவில் குருதியிலும் உயிரணுக்களிலும் காணப்படும் ஒரு மெழுகு பொருள் ஆகும். உடலில் குறிப்பிட்ட அளவு கொழும்பு உடலியேயே உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் நாம் அன்றாடம் உண்ணும் உணவில் இருந்தும் அதிகப்படியான கொழுப்பு உடலில் சேர்கின்றது.
கொழுப்பு உடலுக்கு இன்றியமையாதது. இவை தான் உடலில் வைட்டமின் டி மற்றும் ஹார்மோன்கள் உற்பத்திக்கு துணைப்புரிவதுடன் உடலின் சமநிலையை சீராக பராமரிப்பதில் பொரும் பங்கு வகிக்கின்றது.
ஆனால் உடலில் கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருக்கும் போது அவை பாதக விளைவுகளை ஏற்படுத்துகின்றது. இது உடலில் அதிகமாக இருப்பது எல்டிஎல் கொழுப்பை அதாவது கெட்ட கொழுப்பை அதிகதிக்கச்செய்கின்றது.
நீண்ட காலத்துக்கு கொலட்டிரால் அதிகமாகவே இருப்பதால் இதயத்தில் தமனிகளுக்கு கடுமையான சேதம் பக்கவாதம், மாரடைப்பு, இதய நோய்கள் ஏற்படவும் வாய்ப்பு இருப்பதாக மருத்தவர்கள் எச்சரிக்கின்றனர்.
கொழுப்பை இயற்கையாக கட்டுக்குள் வைக்க ஓமம் ஆயுள்வேத மருத்துவத்தில் தொன்று தொட்டு பயன்பாட்டில் இருக்கும் ஒரு மூலிகை விதை ஆகும்.
ஓமத்தில் நியாசின், தியாமின், சோடியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், புரதம், பாஸ்பரஸ், துத்தநாகம், இரும்புச்சத்து,ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள், சோடியம், ஃபொலேட், வைட்டமின் ஏ, மெக்னீசியம் மற்றும் கால்சியம் ஆகிய ஊட்டச்சத்தக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
அந்தவகையில் ஓமத்தில் செரிந்து காணப்படும் நார்ச்சத்துக்கள் மற்றும் கொழுப்பு அமிலங்கள் உடல் கொழுப்பை கட்டுக்குள் வைப்பதில் பெரும் பங்காற்றுகின்றது.
ஓமத்தை பயன்படுத்தும் முறை
எந்த மருத்துவ பெருட்களையுமே அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொள்வது ஆபத்தானது. இதை தான் நமது முன்னோர்கள் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என குறிப்பிட்டுள்ளார்கள்.
ஓமத்தை சமயலில் சேர்த்து பயன்படுத்துவது நல்லது. இவ்வாறு ஓமத்தை தினசரி உணவில் பயன்படுத்தும் போது உடலில் கொலஸ்டிரால் தனாகவே கட்டுப்பாட்டில் இருக்கும்.
ஓம விதைகளை தனியாக பயன்படுத்தும் போது அதனை எடுத்துக்கொள்ளும் அளவு குறித்து கவனம் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.
ஒரு டம்ளர் நீரில் ஒரு டீஸ்பூன் அல்லது ஐந்து கிராம் ஓமம் சேர்த்து நன்றாக கொதிக்கவிட்டு, வடிகட்டி வெதுவெதுப்பாக இருக்கும் போது வெறும் வயிற்றில் குடிப்பது கொலஸ்டிராலை விரைவில் குறைக்க உதவும்.
ஓமத்தை அளவுக்கு அதிகமாக எடுத்துக்கொண்டால் தலைச்சுற்றல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பிரச்சனையும் சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையையும் தோற்றுவிக்கும். எனவே இதனை அளவாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்துக்கு பெரிதும் துணைப்புரியும்.
கொலட்டிரால் பிரச்சினைக்கு மட்டுமன்றி செரிமான பிரச்சினை, பசியின்மை, வயிற்றில் பூச்சு கோளாறு, மலச்சிக்கல் போன்றவற்றிற்கும் ஓமம் சிறந்த தீர்வாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |