குட்டி ரொனால்டோவாக மாறிய அஜித்தின் மகன்: வைரல் புகைப்படம்
நடிகர் அஜித்தின் மகன் ஆத்விக் கால்பந்து விளையாடும் புகைப்படங்களைப் பார்த்து ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
விளையாட்டில் கலக்கும் அஜித் மகன்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
அஜித் நடிப்பு மட்டுமின்றி, மிகவும் விரும்பப்படும் சூப்பர் ஸ்டார், சமையல், பைக் பந்தயம், கார் பந்தயம், விமானம் கட்டுதல் போன்றவற்றில் தனது ஆர்வத்தைத் காட்டி வருபவர்.
இவர் நடிகை சாலினியை திருமணம் செய்து மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
இவரின் மகன் ஆத்விக் கால்பத்து விளையாட்டில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில் அவர் சென்னையின் எப்.சி அணியின் யூத் டீமிற்காக ஆத்விக் விளையாடும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றது.
அந்தப் புகைப்படத்தைப் பார்த்த நெட்டிசன்கள் குட்டி ரொனால்டோ போல இருப்பதாக அனைவரும் பதிவிட்டு வருகிறார்கள்.