பிறந்த நாளில் வெளியான ஸ்பெஷல் அப்டேட்: அஜித்தின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
அஜித்தின் பிறந்தநாளான இன்று அவரின் சொத்து மதிப்பு பற்றி புதிய தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
1990ஆம் ஆண்டு என்வீடு என்கணவர் என்றத் திரைப்படத்தில் சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானவர் தான் இவர்.
அந்த திரைப்படத்திற்கு பிறகு 1993 ஆம் ஆண்டு அமராவதி திரைப்படத்தில் நடித்து ஹீரோவாக தலை காட்ட ஆரம்பித்தார். அமராவதியில் ஆரம்பித்த தற்போது துணிவாக விடாமுயற்சியை தொட ஆரம்பித்திருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள்.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக தற்போது வரை வலம் வருகின்றார்கள்.
சொத்து மதிப்பு
இந்நிலையில் இன்று பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். அந்தவகையில் இன்று அவரின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது.
துணிவு படத்தில் 85 கோடி வரை சம்பளம் பெற்று வந்த அஜித் தனது அடுத்த திரைப்படத்திற்கு 100 கோடிக்கு அதிகமாக சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், அஜித்தின் ஒட்டுமொத்த சொத்து மதிப்பு 380 கோடி முதல் 400 கோடி வரை இருக்கும். அது மட்டுமல்லாமல் திருவான்மியூரில் ஒரு பிரமாண்டமான வீடும் உள்ளது.
அஜித்திடம் லாம்போகினி, BMW போன்ற சொகுசு கார்களும் உள்ளது. அதுமட்டுமல்லாமல் அப்ரிலியா கபோனார்ட் பைக், பிஎம்டபிள்யூ எஸ்1000 ஆர்ஆர் பைக் மற்றும் பிஎம்டபிள்யூ கே1300 எஸ் பைக் போன்ற விலையுயர்ந்த பைக்குகளும் வைத்திருக்கிறார்.