ஷாலினி இடத்தில் இந்த நடிகையா? அஜித் துரத்தி துரத்தி காதலித்த சுவாதி!
நடிகர் அஜித் ஷாலினிக்கு முன்பு தன்னுடன் நடித்த சக நடிகையை காதலித்த செய்தியொன்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள்.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
தற்போது நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகதனது பிறந்த தினத்தில் அப்டேட் கொடுத்திருந்தார்.
அஜித்தின் முன்னாள் காதல்
சினிமாவில் எவ்வித சர்ச்சைகளிலும் சிக்காமல் இருந்த அஜித், ஷாலினிக்கு முன்பு இன்னொரு நடிகையை துரத்தி துரத்தி காதலித்ததாக சொல்லப்படுகிறது.
அந்தப் பெண் வான்மதி படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடித்த போது சுவாதியை காதலித்துள்ளார். ஆனால் அந்த நேரத்தில் அஜித் பெரிய அளவில் புகழடையவில்லை என்பதால் சுவாதியின் அம்மா இந்த காதலுக்கு தடையாக இருந்திருக்கிறார்.
இதோடு விடாமல் தன் மகளை தொந்தரவு செய்ய வேண்டாம் என கண்டித்திருக்கிறார்.
இதனால் அஜித்தும் சுவாதியுடன் பேசுவது பழகுவதை நிறுத்தி விட்டாராம். ஆனால் தற்போது அஜித் தான் மாஸ் ஹீரோவாக இருக்கிறார்.