பல இலட்சம் பெறுமதியான பைக்கை பரிசாக கொடுத்த அஜித்: எதற்காகத் தெரியுமா?
பல இலட்சம் பெறுமதியான பைக் ஒன்றை பரிசளித்திருக்கிறார் நடிகர் அஜித். இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் தான் அஜித்குமார். இவர் சினிமாவில் 60 படங்கள் வரை நடித்திருக்கிறார்.
மேலும், தமிழ் சினிமாவில் சிறந்த காதல் ஜோடி யாரென்று கேட்டால் யோசிக்காமல் வாயில் வரும் பெயர் அஜித் - சாலினி என்று சொல்வார்கள்.
இவர்கள் இருவரும் தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக வலம் வருகின்றார்கள். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
தற்போது நடிகர் அஜித் மகிழ்திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகதனது பிறந்த தினத்தில் அப்டேட் கொடுத்திருந்தார்.
பரிசாக கொடுத்த பைக்
இந்நிலையில் அஜித் பல இலட்சம் மதிப்புள்ள பைக் ஒன்றை பரிசளித்திருக்கிறார்.
அஜித் நடிப்பதில் மட்டும் ஆர்வம் கொள்ளாமல் ரேஸிங், துப்பாக்கி சுடுதல், ட்ரோன்கள் உள்ளிட்ட விஷயங்கள் மீது ஆர்வம் செலுத்தி வருகின்றார். மேலும், சமீப காலமாக பைக் ரைடில் ஈடுபட்டு வருகிறார்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் அவர் பைக் ரைடு சென்று வருகிறார். இதன்போது அவருடன் பைக் ரைட் செய்த சுகத் என்ற நபருக்கு BMW F850 GS பைக்கை பரிசாக கொடுத்திருக்கிறார்.
இந்த பைக்கின் விலையானது 12 லட்சம் முதல் ரூ.15 லட்சம் வரையில் பெறுமதியானது. பரிசாக இந்த பைக்கை பெற்ற சுகத் தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு பதிவையிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.
அதில் அஜித்துடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு “நீங்கள் சிறந்தவர் அண்ணா! உங்களுடன் இன்னும் பல தூரங்களை கடக்க அவ்வளவு நாள் காத்திருக்க முடியாது” என ஒரு பதிவை பதிவிட்டிருக்கிறார்.