இன்னும் மூன்று நாட்களில் நான் இறந்தும் போகலாம்: சிகிச்சைக்குப் பின் வெளியான அஜித் தம்பியின் தற்போதைய நிலைமை!
வீரம் திரைப்படத்தில் அஜித்தின் தம்பியாக நடித்திருந்த பாலா அண்மையில் கல்லீரல் பாதிப்புபடைந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் இவரின் தற்போதைய நிலைமை குறித்து புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
நடிகர் பாலா
நடிகர் பாலா பிரபல இயக்குனர் சிறுத்தை சிவாவின் தம்பியாவார். இவர் 2003ஆம் ஆண்டு அன்பு என்ற திரைப்படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து மஞ்சள் வெயில், கலிங்கா? காதல் கிசுகிசு, அம்மா அப்பா செல்லம் போன்ற திரைப்படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார்.
இவர் அஜித் உடன் வீரம் திரைப்படத்தில் தம்பியாக நடித்திருந்தார். அதுதான் அவரை பிரபலமாக்கியது.
தற்போதைய நிலைமை
இந்நிலையில் பாலா அண்மையில் கல்லீரல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடந்திருந்தது தொடர்நது அவரின் உடல் நலம் சரியில்லாமல் போய் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார்.
தற்போது கொஞ்சம் கொஞ்சம் உடல் நலம் தேறி நன்றாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் சில நாட்களுக்கு முன்பு கூட திருமண நாளை கேக் வெட்டி அவர் கொண்டாடியிருந்தார். அதன் பிறகு வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார்.
அந்த வீடியோவில் இந்த சிகிச்சையில் மூன்று நாட்களில் நான் இறந்து போக வாய்ப்பிருப்பதாகவும் எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என தெரிவித்திருந்தார்.
மேலும், இவரின் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்திருப்பதாகவும் சிகிச்சைக்குப் பின் தற்போது தன் மனைவியுடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்தப் புகைப்படத்தில் உடல் எடைக்குறைந்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு மாறியிருக்கிறார்.