வெற்றிகரமாக முடிந்த அறுவை சிகிச்சை.... மருத்துவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நடந்தது என்ன?
கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் கிட்னியை மாற்றி வைத்து அறுவை சிகிச்சை செய்த அதிர்ச்சி சம்பவம் அண்மையில் நடைபெற்றுள்ளது.
அமெரிக்காவில் உள்ள தனியார் மருத்துவமனை சமீபத்தில் செய்த கிட்னி மாற்று அறுவை சிகிச்சையில் ஆளை மாற்றி அறுவை சிகிச்சை செய்துள்ளது.
கிட்னி கிடைத்ததும் வரிசைப்படி தான் அந்த கிட்னி பொருத்தப்படும். இப்படியாக ஒரு கிட்னி கிடைத்ததும் அந்த டாக்டர்கள் அடுத்த முன்னுரிமையில் இருந்த இருவரை அழைத்துள்ளார்.
இவரும் வந்துள்ளனர். ஆனால் முதலில் உள்ள நபர் தயாராக இருந்த போது இரண்டாம் நபருக்கு இவர் கிட்னியை அறுவை சிகிச்சை மூலம் பொறுத்திவிட்டார்.
அறுவை சிகிச்சை முடித்த பின் தான் ஆளை மாற்றி கிட்னியை பொறுத்தியதே தெரியவந்தது. தற்போது பொறுத்தப்பட்ட கிட்னி இரண்டு நபர்களுக்கும் பொறுத்தமானதாக இருந்தாலும் தற்போது தகுதியான நபருக்கு கிட்னி கிடைக்காமல் மற்றவருக்கு கிடைத்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தவறு மனித தவறுகளால் நடந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளை கண்காணிக்கும் அமைப்பு இதை விசாரணை நடத்தி வருவதாக கூறுயுள்ளது.
இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.