பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்: தமிழ் சினிமாவிற்கு மீண்டும் ஒரு பேரிழப்பு
தமிழ் சினிமாவில் இயக்குனநரும், நகைச்சுவை நடிகருமாக டி.பி.கஜேந்திரன் தனது 68ஆவது வயதில் திடீரென உயிரிழந்துள்ளார்.
டி.பி.கஜேந்திரன்
தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நகைச்சுவை நடிகருமாக வலம் வந்தவர் தான் டி.பி.கஜேந்திரன். இவர் பழம்பெறும் நடிகை டி.பி.முத்துலட்சுமியின் மகன் ஆவார்.
மேலும், இவர் இயக்குனர் விசுவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். அவரைப்போலவே குடும்ப கதைகளை மையமாக வைத்தே சில படங்களை இயக்கியவர்.
டி.பி.கஜேந்திரன் பாட்டு வாத்தியார், பட்ஜெட் பத்மநாதன், மிடில் கிளாஸ் மாதவன், பாசமுள்ள பாண்டியரே, பந்தா பரமசிவம் போன்ற திரைப்படங்களை இயக்கியிருக்கிறார்.
இந்நிலையில், இவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். சென்னையில் உள்ள இல்லத்தில் காலமாகியுள்ளார்.
மேலும் தற்போது திரைத்துறையில் அடுத்தடுத்த மரணம் நிகழ்ந்துக்கொண்டிருக்க வேளையில், இவரின் மறைவு செய்தியானது திரையுலகினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.