குல தெய்வத்திற்காக இதை செய்தாரா? மனைவி மகனுடன் எங்கு சென்றிருக்கிறார் பாருங்க
நடிகர் அஜித் குமார் மனைவி, மகனுடன் கேரளாவில் சென்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்குமார்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் அஜித்குமார்.
இவர், நடிப்பில் கடந்த வருடம் வெளியாகிய விடாமுயற்சி திரைப்படம் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை.
இதனை தொடர்ந்து வெளியாகிய குட் பேட் அக்லி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. ஆனால் அநேகமான ரசிகர்களுக்கு இந்த திரைப்படம் சுத்தமாக பிடிக்கவில்லை.

இதற்கிடையே சமீபத்தில் நடிகர் அஜித்குமாருக்கு பத்மபூஷன் விருதும் வழங்கப்பட்டது.
குல தெய்வத்திற்காக இதை செய்தாரா?
இந்த நிலையில் அஜித் தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கின்றன.
அந்த வகையில், நடிகர் அஜித் அவருடைய மனைவி மற்றும் மகனுடன் மேலாடை அணியாமல் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.

அந்த படங்களில், அஜித் மார்பின் வலது பக்கத்தில் பச்சைக் குத்திக் கொண்டுள்ள ஃபோட்டோ இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அந்த டாட்டூ அஜித்தின் குல தெய்வமான பகவதியம்மன் என தகவல் வெளியாகியுள்ளது.
ஊட்டுகுளங்கரா பகவதி கோயில் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பெருவெம்பா கிராமத்தில் அமைந்துள்ள கோயில் என அறியப்பட்டுள்ளது.

இங்கு அஜித் அவருடைய குடும்பத்தினருடன் வருகை தந்து அடிக்கடி சாமி தரிசனம் செய்து செல்வார்களாம். இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |