துணிவு பட நடிகர் திடீர் தற்கொலை! பிறந்தநாளில் உயிரிழந்த சோகம்
துணிவு படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அஜித் நடித்த துணிவு
போனி கபூர் தயாரிப்பில் எச், வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் தான் துணிவு.
பொங்கல் தினத்தை ஒட்டி வெளியான இந்த படம் வசூலில் சாதனை படைத்துள்ளது. ஆனால் அடுத்தடுத்து சர்ச்சையையும் சந்தித்து வருகின்றது.
ஆம் துணிவு படத்தினை முதல் காட்சியில் பார்க்க சென்ற ரசிகர் ஒருவர் வாகனத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தார். அதனைத் தொடர்ந்து மற்றொரு ரசிகர் படத்தினை பார்க்க அனுமதிக்கவில்லை என்று கூறி தற்கொலை செய்து கொண்டார்.
தற்போது துணிவு படத்தில் நடித்த நடிகர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
டான்ஸர் ரமேஷ்
டிக் டாக்கில் தனது நடனத்திறமையின் மூலம் பிரபலமான ரமேஷ் பின்பு பிரபல ரிவியில் டான்ஸராக இருந்தார்.
தற்போது படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில், அஜித் நடித்த துணிவு படத்தில் பாடலுக்கு அவருடன் நடனமாடியுள்ளார். பின்பு ரஜினி நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்திலும் நடனமாடியுள்ளதாக கூறப்படுகின்றது.
இன்று அவருடைய பிறந்தநாள் என்பதால் தனது முதல்மனைவியை பார்க்க சென்றுள்ளதாகவும், மாலை கேபி பார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இருந்து 10வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்ற விபரம் தெரியவராத நிலையில், இவர் மதுபோதையில் இருந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.