குப்பைகுழியில் ரொமன்ஸை பகிர்ந்து கொள்ளும் காதல் ஜோடிகள்! திகைப்பில் இணையவாசிகள்
குப்பைகள் நிறைந்த ஏரியில் துணையுடன் போட்டோ ஷீட் செய்த காதலர்களின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குப்பை குழியில் போட்டோ ஷீட்
பொதுவாக திருமணங்கள் என்றால் வேடிக்கை காட்சிகளுக்கு அளவே இருக்காது.
மேலும் திருமண செய்ய போகும் மணமக்களை விட அவர்களின் நண்பர்களின் சேட்டைகளுக்கு ஒரு எல்லையே இருக்காது.
அந்த வகையில் திருமணத்திற்கு முன் தற்போது இருக்கும் இளைஞர்கள் போட்டோ ஷீட்டொன்றை செய்து கொள்வார்கள். அந்த போட்டோ ஷீட் இயற்கைக்காட்சி நிறைந்த இடங்கள், பார்த்து வியந்து போகும் இடங்களில் எடுத்து கொள்வார்கள்.
இப்படியான நிலையில், குப்பைகள் நிறைந்த ஏரியில் காதலர்கள் போட்டோ ஷீட் செய்து கொண்ட காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள், “ இந்த இடத்தில் எல்லாமா போட்டோ ஷீட் செய்வார்கள்” என கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.