விமானநிலையத்தில் மன்னிப்பு கேட்ட அஜித்! என்ன மரியாதையான மனுஷன்யா? வைரல் காட்சி
நடிகர் அஜித் விமான நிலையத்தில் தன்னிடம் செல்பி எடுக்க நினைத்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுச் சென்றுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகர் அஜித்
தமிழ் மொழியில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். அமராவதி, காதல் கோட்டை, அவள் வருவாளா என ஆரம்பித்து தற்போது வரை இளைஞர்களின் கனவு நாயகனாக வலம் வருகின்றார்.
அந்த வகையில், 3 வருட காத்திருப்பிற்கு பின்னர், வெளியான திரைப்படம் வலிமை. தற்போது, AK61 திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும், இதன் நடுவே, AK62 திரைப்படத்தின் அறிவிப்பும் வெளியானது.
பல ஆண்டுகள் கழித்து அஜித் AK61 படத்தில், டபுள் ரோலில் அதாவது ஹீரோ மற்றும் வில்லன் என நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படம் முன்பே அனைவரின் கவனத்தை ஈர்த்துவிட்டது.
படப்பிடிப்பு பணிகள் ஐதராபாத்தில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விமான நிலையத்தில் வைரல் சம்பவம்
இந்நிலையில், அஜித் குமார் ஏர்போட்டில் இருக்கும் சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் செம வைரலாகி வருகிறது. இந்நிலையில், அஜித்தை விமான நிலையத்தில் அதிகாரி ஒருவர் சோதனை செய்யும் வீடியோ இணையத்தில் வெளியாகி டிராண்டாகி வருகிறது.
அந்த வீடியோவில் அஜித் வெள்ளை நிற சட்டையும், கறுப்பு நிற பேண்டும் அணிந்திருக்கிறார். மேலும், கறுப்பு நிறத்தில் மாஸ்க் அணிந்திருந்தார்.
விமான நிலையத்தில் அதிகாரி சோதனை செய்யும்போது நான் அஜித் என்று சொல்லாமல், ஒரு செகண்ட் அமைதியாக நின்று, இரு கைகளையும் உயர்த்தி பணிவுடன் நிற்கிறார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இந்த பணிவுதான், அஜித் இந்த உயர்ந்த இடத்திற்கு வர காரணம் என்று கூறி அஜித்தின் ரசிகர்கள் இந்த வீடியோவை டிராண்டாக்கி வருகின்றனர்.
மற்றொரு காட்சியில் பெண் ஒருவர் செல்பி எடுக்கக் கேட்ட தருணத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்ததுடன், அதற்காக திரும்பி பார்த்து சாரி கூறியுள்ள காட்சி ட்ரெண்டாகி வருகின்றது.
#AjithKumar Sir Entry In Airport Check In Session. ❤️❤️#AK61 #AK62 pic.twitter.com/jlN2r5ZmFi
— Ajith Seenu 2 ? தல..தாய்..தாரம்..²⁸ʸʳˢᴼᶠᴬʲⁱᵗʰⁱˢᵐ (@ajith_seenu) June 15, 2022
AK Recent At Airport ???#AK61 #AjithKumar #AK62 ? pic.twitter.com/NsvovxbSK7
— தல மருது ⚠️ (@MarudhuMDU) June 15, 2022