நம்ம ஐஸ்வர்யா ராய் கிட்ட எவ்வளோ சொத்து இருக்கு தெரியுமா? கேட்டா வாயடைச்சு போவீங்க!
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு எவ்வளவு இருக்கிறது என்று உங்களுக்கு தெரியுமா? கேட்டா நீங்களே ஆடிப்போயிடுவீங்க.
ஐஸ்வர்யா ராய்
உலக அழகியாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் அப்போதும் இப்போதும் தமிழ் சினிமாவில் கொண்டாடும் நடிகையாக இருப்பவர்.
தமிழ் சினிமாவில் மணிரத்தினத்தின் இருவர் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். அதற்கு பிறகு சூப்பர் ஹிட் படங்களை அடுத்தடுத்துக் கொடுத்து முன்னணி நடிகையாக திகழ்ந்தார்.
அதன் பிறகு பொலிவூட் நடிகர் சல்மான் கானை காதலித்து வந்தார். ஆனால் அவர்களிடம் கருத்து வேறுபாடு காரணமாக அவரிடம் இருந்து விலகி விட்டார்.
பின்னர் 2007ஆம் ஆண்டு அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். மேலும், இவர்கள் இருவருக்கும் ஆராத்யா என்ற பெண் குழந்தையும் இருக்கிறார்.
தமிழில் ரஜினி நடிப்பில் வெளியான எந்திரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் அதற்கு பிறகு சில ஆண்டுகள் கழித்து மணிரத்தினம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து மீண்டும் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
மேலும், இவர் தமிழை விட ஹிந்தி படங்களில் தான் அதிக நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சொத்து மதிப்பு
இந்நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராயின் சொத்து மதிப்பு பற்றிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
ஐஸ்வர்யா ராயிடம் பல பங்களாக்களும் காணிகளும் உள்ளது. இவர்களின் மொத்த சொத்தும் 776 கோடிக்கு மேல் இருக்கிறதாம். அதுமட்டுமல்லாமல் ரோல்ஸ்ராய்ஸ் கோஸ்ட் கார்களும், சொகுசு கார்களும் சொந்தமாக வைத்திருக்கிறார்கள்.