ஐஸ்வர்யா ராயை மோசமாக விமர்சிக்கும் நெட்டிசன்கள்! எதற்காக?
உலக அழகி பட்டத்தை வென்று 22 ஆண்டுகள் ஆகியும், இன்றும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார் ஐஸ்வர்யா ராய்.
சமீபத்தில் 49வது பிறந்தநாளை கொண்டாடிய ஐஸ்வர்யா ராய்க்கு வாழ்த்துக்கள் குவிந்தன, உடல் எடையை பராமரிப்பு, ஆரோக்கியமான வாழ்க்கை, நட்சத்திரமாய் ஜொலிப்பது என பல விதங்களில் ஐஸ்வர்யா ராய் பலருக்கும் உதாரணம் தான்.
ஆனால் சில நாட்களுக்கு முன் ஐஸ்வர்யா ராயின் செயல் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது, அது ஏன்?
ஐஸ்வர்யா ராயின் குடும்பம்
திரைப்பயணத்தில் உச்சத்தில் இருந்த ஐஸ்வர்யா ராய் 2007ஆம் ஆண்டு இந்தி நடிகரும் அமிதாப் பச்சனின் மகனுமான அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டார்.
இவர்களது நிச்சயதார்த்த அறிவிப்பு 2007ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் வெளியிடப்பட்டது.
பின்னர் அதே ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி இவர்களது திருமணம் பன்ட் குடும்ப முறைப்படி நடந்தேறியது.
இவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் இருக்கிறார், அவருக்கு வயது 10 வயதாகிறது.
கடுமையான விமர்சனம்
சமீபத்தில் நடந்த பொன்னியின் செல்வன் 1 வெற்றி விழாவில் தன்னுடைய குடும்பத்தினருடன் கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய்.
விமான நிலையத்தில் வந்திறங்கிய ஐஸ்வர்யா, தன் மகள் ஆராத்யாவை கைகளை பிடித்துக்கொண்டு அழைத்து வந்தார்.
எப்போதுமே வெளியிடங்களில் தன் மகளை பத்திரமாக அழைத்து வருவதையே வழக்கமாக கொண்டுள்ளார் ஐஸ்வர்யா.
இவரின் இந்த செயலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர், சிறுமியாக வளர்ந்துவிட்ட பிள்ளையை இப்படியா கையாள்வது? என கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
பொது இடத்தில் இப்படி நடந்து கொள்ளலாமா?
குழந்தைகளை வளர்ப்பது என்பது ஒவ்வொரு தாய்மார்களுக்கும் வேறுபடும், தாங்கள் அனுபவ ரீதியாக கற்றுக்கொண்டதை கொண்டு குழந்தைகளுக்கு நல்லது, கெட்டதுகளை சொல்லிக் கொடுத்து வளர்ப்பார்கள்.
இன்றைய காலத்தில் இருவருமே வேலைக்கு செல்வதாக குழந்தை வளர்ப்பு என்பது சவாலாகிவிட்டது.
உளவியலாளர்களின் கூற்றுப்படி, குழந்தைகள் இரண்டு வயதை அடைந்து விட்டாலோ, தங்களுக்கு எது பிடிக்கும், எது பிடிக்காது என்பதை தேர்வு செய்யத் தொடங்கி விடுவார்கள், அவர்களுக்கான சுதந்திரத்தை நிச்சயம் வழங்க வே்ண்டும்.
அவர்களது கருத்துகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், அவர்களுக்கான சுதந்திரத்தை வழங்கும் போது தான் தன்னம்பிக்கையை வளர்க்க முடியும், அப்போது தான் தனியாக முடிவெடுக்கும் திறன் படைத்தவர்களாக வளர்வார்கள்.
ஆனாலும் அவர்களது பாதுகாப்பில் கவனம் செலுத்துவது பெற்றோரின் கடமையே என தெரிவித்துள்ளார்.