தொடர் சர்ச்சை... சும்மா யாரும் தூக்கி கொடுக்கவில்லை! கொதித்தெழுந்த நடிகை அதிதி ஷங்கர்
தமிழ் சினிமாவிம் நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர்.
இவருக்கு, படவாய்ப்பு உடனே கிடைத்துவிட்டதாகவு, பாடகி வாய்ப்பும், அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்து விட்டதாக பல நடிகைகள் கொந்தளிக்க பெரும் சர்ச்சையாகவே வெடித்துள்ளது.
சும்மா வாய்ப்பு தரவில்லை
இந்நிலையில், இதுகுறித்து அதிதி தெரிவிக்கையில், நான் இயக்குனர் மகள் என்பதால் தான் வாய்ப்பு கிடைத்ததாகவும், எண்ணுக்கின்றனர். எனக்கு இயல்பாகவே நடிப்பு, நடனம், பாட்டு பாடுவது என அனைத்தும் வரும் அதனால் தான் எனக்கு வாய்ப்பு கிடைத்தது.
மருத்துவ படிப்பை முடித்ததும், அப்பாவிடம் நடிக்க ஆசை இருப்பதாக தெரிவித்தேன். அவரும் என் ஆசைக்கு சம்மதம் தெரிவித்தார்.
அப்பா கற்றுக்கொடுத்தார்
அதுமட்டுமின்றி சினிமா பற்றிய பல விஷயங்களை எனக்கு கற்றுக்கொடுத்தார். கவர்ச்சி நடிப்பு மட்டும் அவர் நோ சொல்லிவிட்டார்.
அதனால், கவர்ச்சி இல்லாமல் குடும்ப கதாபாத்திரங்களில் மட்டுமே நடிப்பேன் என தெரிவித்துள்ளார்.
இதனால், அதிதி ஷங்கர் தொடர் சர்ச்சைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக பேசியுள்ளார்.