மார்ச் சனி முதல் 3 கிரக சேர்க்கை:3 ராசிகளுக்கு முடியும் கடன் பிரச்சனை..அள்ளும் செல்வம்
மூன்று கிரகங்கள் ஒரே ராசியில் இணைவதால் திரிகிரக யோகம் உருவாகிறது. இதனால் மார்ச் 15-க்கு பிறகு மூன்று ராசிக்காரர்களுக்கு பல அதிர்ஷ்ட நன்மைகள் கிடைக்கும்.
திரிகிரக யோகம் 2026
இந்த 2026 இல் ஒவ்வொரு கிரகப்பெயர்ச்சியும் மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. இந்த வருடம் பல கிரகப்பெயர்ச்சிகள் நடைபெற்றாலும் ஹோலிக்குப் பிறகு திரிகிரக யோகம் மிகவும் சிறப்பாக பார்க்கப்படுகின்றது.
இந்த திரிகிரக யோகம் மார்ச் 15 அன்று சூரியன், சனி, சுக்கிரன் ஆகிய மூன்று முக்கிய கிரகங்கள் மீன ராசியில் இணைவதால் உண்டாகின்றது.
இந்த மூன்று கிரகங்களும் வறுமையை நீக்கி செல்வத்தை அள்ளித் தரும். இந்த வகையில் மூன்று கிரகப்பெயர்ச்சிகளினால் ஒரு ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தை பெற்று செல்வந்தர்களாக மாறப்போகின்றன. அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

ரிஷபம்
- ரிஷப ராசிக்காரர்களுக்கு திரிகிரக யோகத்தால் பணத்தை அள்ளி கொடுக்கும்.
- பல நாட்களாக உங்களுக்கு இருந்த கடன் பிரச்சனை முடிவிற்கு வரும்.
- நீங்கள் வெளிநாடுகளில் வேலை தேடி இருந்தால் அது இந்த கால கட்டத்தில் வெற்றியை தரும்.
- வேலை செய்யும் இடத்தில் நீங்கள் நினைத்ததை சாதிக்கும் வழி பிறக்கும்.
- உங்களுடைய பணம் யாருக்காவது கொடுத்து கிடைக்காமல் இருந்தால் அது தற்போது கிடைக்கும்.
மிதுனம்
- மிதுன ராசிக்காரர்களுக்கு இது ஒரு நல்ல நேரமாகும்.
- சூரியன், சனி, சுக்கிரனின் ஆசிகள் கிடைக்கும்.
- மிக முக்கியமாக உங்களுககு நெடுநாளாக இருந்த கடன் பிரச்சனை தீரும்.
- நீங்கள் ஏதாவது வழக்குகளில் வாதாடி கொண்டிருந்தால் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாக வரும்.
- தொழில் செய்பவர்களுக்கு பெரிய ஆர்டர்கள் கிடைக்கும்.
- வீட்டில் அதிகளவில் மகிழ்ச்சி அடைவீர்கள்.
கும்பம்
- கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் பொற்காலம்.
- இந்த ராசியின் அதிபதி சனி என்பதால், திரிகிரக யோகத்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
- வீடு, மனை வாங்கும் யோகம் உண்டு.
- ஏதாவது தொழிலில் முதலீடு செய்ய இது சிறந்த நேரம்.
- உங்கள் தொழில் வளர்ச்சி அடையும்.
- பழைய முதலீடுகளில் இருந்து பெரிய லாபம் கிடைககும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).