நாள்பட்ட இருமல், சளியால் அவஸ்தையா? கவலையே வேண்டாம்.. தீர்வு தரும் ஆடாதோடை
ஆடாதோடை அல்லது ஆடாதொடை, வாசை என்று அழைக்கப்படுவது Acanthaceae என்ற தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு புதர்ச் செடியாகும். இதன் இலை, பூ, பட்டை, வேர் போன்றவை மருத்துவ மூலிகைகளாக பயன்படுகிறது.
இவற்றின் இலைகளை ஆடுகள் சாப்பிடாது என்பதால் உருவான ‘ஆடு தொடா’ என்ற காரணப் பெயர், ஆடாதோடையாக மருவியிருக்கலாம் எனப்படுகிறது.
மாவிலை, நுணாவிலையைப் போன்று ஈட்டி வடிவத்தில் நீண்ட பெரிய இலைகளோடு செழுமையாய் வளர்ந்திருக்கும். வெள்ளை நிறப் பூக்கள் இதன் அடையாளம்.
இது கைப்பு சுவை கொண்டது. இந்த மூலிகை வெப்பத் தன்மை (சூடு) கொண்டது எனக் கூறப்படுகிறது.
இதன் நன்மைகள் பற்றி அகத்தியர் குறிப்பிடுகையில்,
"ஆடாதோடைப் பன்ன மையறுக்கும் வாதமுதற்
கோடாகோ டிச்சுரத்தின் கோதொழிக்கும்- நாடின
மிகுத்தெ ழுந்தசன்னி பதின்மூன்றும் விலக்கும்
அகத்துநோய் போக்கு மறி.”
- (அகத்தியர் குணவாகடம்) என எழுதப்பட்டுள்ளது.
அதாவது, இருமல், வாந்தி, விக்கல், சன்னி, சுரம், வயிறு தொடர்பான நோய்கள் போன்றவற்றை நீக்கும்.
இதன் இ்லைகளில் டானின், அல்கலாய்டுகள். சப்பொனின், பீனாலிக்சு, பிளாவநாய்டுகள், வாசிசின், வசாக்கின், வாசினால், வாசினோன், ஆடாதோடின், வைட்டமின் சி, கேலக்டோஸ் முதலியன காணப்படுகின்றன.
இந்த வாசிசின் என்னும் அல்கலாய்டு நுரையீரல் செல்களில் வேலை செய்து அதை விரிவடைய செய்வதால் இது ஆஸ்த்மா, நாட்பட்ட இருமல், சளி போன்ற நோய்களை தீர்ப்பதில் இந்த மூலிகை முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதீத வலியால் அவஸ்தைப்படுபவர்களுக்கு
உடலில் அதிக சளித்தொல்லைகள் காரணமாக, உடல் தசைகளில் வலி ஏற்படும்.
அந்த வலிகளைப் போக்க, ஆடாதோடை இலைகளை பொடியாக்கி, நீரில் கலந்து பருகிவர, தசை வலிகள் யாவும் விலகிவிடும்.
எதிர்பாராத விதமாக மார்பில் அடிபட்டு, வலியால் துடிக்கும் பொழுது, ஒரு ஆடாதோடை இலையுடன் இரண்டு வெற்றிலைகளை மென்று சாப்பிட, உடனடியாக வலி குறையும்.
மறந்தும் கூட சாதாரண அறிகுறிகளை அலட்சியப்படுத்த வேண்டாம்! கொடூர புற்றுநோயாக இருக்கலாம்
நாள்பட்ட சளிக்கு தீர்வு
நுரையீரலானது சுவாசக் காற்றை உள்வாங்கி அதிலுள்ள பிராணவாயுவைப் பிரித்து எடுத்துக் கொண்டு கரியமில வாயுவை வெளியேற்றுகிறது.
இது நன்கு செயல்பட்டால் தான் இரத்தம் சுத்தமடையும், நோய்கள் அண்டாமல் ஆரோக்கியமாக வாழலாம்.
ஆடாதோடை இலையானது நுரையீரல் காற்றுச் சிற்றறைகளில் உள்ள அசடுகளை (சளி) நீக்கி ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
ஆடாதோடை இலை, தூதுவளை இலை சம அளவு எடுத்து காயவைத்து பொடியாக்கி வைத்துக்கொண்டு தினமும் காலை, மாலை வேளைகளில் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சம்பந்தமான நோய்கள் அனைத்தும் நீங்கும்.
கொழுப்புகளை கரைக்கும்
ஆடாதோடை இரத்த நாளங்களில் உள்ள சளியை நீக்கி ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
ரத்தத்தில் உள்ள தேவையற்ற உப்பு, கொழுப்பு போன்றவற்றை மாற்றும் தன்மை இதற்கு உண்டு.
தொண்டை தொற்றுகள் சரியாக
தொண்டைக் கட்டாமல் இருக்க பாடகர்கள் பயிற்சி மற்றும் உணவுக்கட்டுப்பாடு மேற்கொள்வார்கள்.
அவர்கள் ஆடாதோடையை கஷாயமாகவோ, சிரப் ஆகவோ சேர்த்துக் கொண்டால் நல்ல குரல் வளம் பெறுவதோடு தங்கள் தொண்டையை கிருமித் தொற்று ஏற்படாமல் காத்துக் கொள்ளலாம்.
வயிற்றின் இந்த பகுதியில் வலித்தால் என்ன பிரச்சனை தெரியுமா?
ஆஸ்துமா குணமாக
ஆடாதோடை இலைகளை நன்கு அலசி, நீரில் காய்ச்சி, மூன்றில் ஒரு பங்காக நீர் சுடும்வரை வைத்திருந்து, பின்னர் தேனுடன் கலந்து பருகிவர, ஜுரம், சளி, இருமல், உடல்வலி மற்றும் ஆஸ்துமா பாதிப்புகளை நீக்கும்.
இந்த பாதிப்புகள் தீரும் வரை, தினமும் இந்த முறையில் இலைகளை நீரிலிட்டு காய்ச்சி பருகிவரலாம்.
மூச்சுத்திணறல் குணமாக
ஆடாதோடை இலைச்சாற்றுடன் தேன் கலந்து அத்துடன் பனங்கற்கண்டு அல்லது கருப்பட்டி எனும் பனை வெல்லம் சேர்த்து, தினமும் இரண்டு அல்லது மூன்றுவேளை பருகிவர, சுவாசக் கோளாறுகளால் உண்டாகும் இரத்த வாந்தி, நுரையீரலில் சளி மிகுதியால் உண்டாகும் மூச்சுத்திணறல், வறட்டு இருமல் மற்றும் இரத்தம் கலந்து வரும் சளி போன்ற பாதிப்புகள் விரைவில் நீங்கி, உடல் நலம் சீராகும்.
அவஸ்தை தரும் கொழுப்பு கட்டிகளை கரைய வைக்க வேண்டுமா?
இடுப்பில் ஏற்படும் புண்களுக்கு
இறுக்கமான உள்ளாடைகள் அணிவதால் இடுப்பில் ஏற்படும் புண்களின் பாதிப்புகள் நீங்கி அவற்றின் தழும்புகள் மறைய, ஆடாதோடை இலைகளுடன் குப்பைமேனி இலைகளை கலந்து அரைத்து, இடுப்புப்புண்களின் மீது தடவி வர வேண்டும்.
வயிற்று வலி சரியாக
ஆடாதோடை இலைகள், காய்கள் இவற்றை கைப்பிடி அளவு எடுத்து அரைத்து, மூன்று டம்ளர் நீரில் ஒரு டம்ளர் நீராக காய்ச்சி, தினமும் இரண்டு வேளை சாப்பிட்டுவர, சரும வியாதிகளான படை, ஊறல், விக்கல், வாந்தி வயிற்றுவலி போன்ற பாதிப்புகள் குணமாகும்.
பேன், பொடுகு தொற்றை நிரந்தரமாக போக்க வேண்டுமா? இதை செய்தாலே போதும்