நடிகை ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா?
தனது தனித்துவமான நடிப்பாலும் வித்தியாசமான கதாபாத்திரங்களாலும் அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன்.
இவர் 80 மற்றும் 90களில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்தவர். அதுமட்டுமில்லாமல் சாமி படங்கள் என்றாலே அது ரம்யா கிருஷ்ணன்தான் எனுமளவுக்கு தனது நடிப்பை வெளிப்படுத்தியவர்.
இவர் படையப்பா திரைப்படத்தில் நடித்த நீலாம்பரி கதாபாத்திரம் இன்று வரையில் மக்களால் பெரிதும் பேசப்படுகின்ற ஒன்றாகவே காணப்படுகிறது.
நீலாம்பரி கதாபாத்திரத்துக்கு பிறகு பாகுபலியில் சிவகாமி கதாபாத்திரம் இவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும், நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பன்முகம் கொண்டவராக விளங்கினார்.
இந்நிலையில் ஐபிஎல் கிரிக்கெட் தொடங்கியிதிலிருந்து பல பிரபலங்களும் தங்கள் குடும்பத்துடன் வந்து கிரிக்கெட் பார்ப்பதை அவதானிக்க முடிகிறது.
நடிகை ரம்யா கிருஷ்ணனும் தனது மகனுடன் கிரிக்கெட் பார்க்க வந்துள்ளார். அந்நேரத்தில் அவரது மகனுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரம்யா கிருஷ்ணனுக்கு இவ்வளவு பெரிய மகனா என்று எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.
image - mirchi9