பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? வாயடைத்துப் போன சின்னத்திரை பிரபலங்கள்
சின்னத்திரை பிரபலங்களில் பாரதி கண்ணம்மா சீரியல் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வினுஷாவின் சம்பளம் தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாரதிக்கண்ணம்மா சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா சீரியல் முக்கிய இடத்தை பிடிக்கிறது.
ஆரம்பத்தில் இந்த சீரியல் சற்று பரபரப்பாக செல்லவில்லையென்றாலும் பாரதி மற்றும் கண்ணம்மா விவாகரத்து தொடர்பில் தகவல் வெளியானதிலிருந்து டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் ஓடிக் கொண்டிருகிறது.
மேலும் இந்த சீரியலின் வெற்றிக்கு ரோஷினிக்கு அதிக பங்கு உண்டு என்றே கூற வேண்டும்.
இதற்கு புதிய திருப்புமுனை கொடுக்கும் வகையில் ரோஷினி சீரியலை விட்டுவிலகியதும் புதிய கண்ணம்மாவாக வந்த வினுஷாவை மக்கள் கண்ணம்மாவாக ஏற்றுக்கொள்ள சற்று காலத்தாமதமாகியது.
சின்னத்திரைக்கு அறிமுகம்
மேலும் ரோசினி போன்று காணப்படும் வினுஷா, ஏப்ரல் 28, 1994-ம் ஆண்டு அரக்கோணம் எனும் பிறந்தார்.
இதனை தொடர்ந்து வினுஷா. வள்ளியம்மாள் கல்லூரியில் தன்னுடைய பட்டப்படிப்பை முடித்துவிட்டு சுந்தரி சீரியல் நடித்து வரும் கேபிரில்லாவுடன் இணைந்து மைம் நிகழ்ச்சிகளில் நடித்துள்ளார்.
மேலும் இவர் மாடலிங் மற்றும் டிக்டாக் பல தரப்பில் பிரபமாகியவராக காணப்படும் வினுஷா, சில திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.
சம்பளம் தொடர்பான உண்மைகள்
இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியலில் நடிப்பதற்கு ஒரு எபிசோடுக்கு சுமார் 20000 முதல் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இவர் பல துறைகளில் முயற்சி செய்துக் கொடுப்பதால் எபிசோடுக்கு 20000 ரூபாய்க்கு மேல் தான் சம்பாரிப்பார் என சின்னத்திரை பிரபலங்கள் பலர் கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வினுஷாவிற்கு தொடர்ந்து ஆதரவு வழங்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.