ரம்யாகிருஷ்ணன் மீது செருப்பை வீசிய ரசிகர்கள்: பல ஆண்டுகள் கழித்து அவிழ்ந்த உண்மை
படையப்பா படத்தில் ரஜினிக்கு எதிராக வில்லியாக நடித்த ரம்யாகிருஷ்ணன் மீது ரசிகர்கள் செருப்பை வீசிய உண்மை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
தமிழ் மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வரும் ரம்யாகிருஷ்ணனுக்கு அதிகமான புகழை தேடிக் கொடுத்த திரைப்படம் என்றால் அது படையப்பா தான்.
இந்த படத்தில் ரஜினிகாந்திற்கு எதிராகவும், பயங்கரமான வில்லியாகவும் செயல்பட்டு தற்போது அதே நீலாம்பரி பெயருடன் வலம் வருகின்றார்.
படையப்பா படத்திற்கு அடுத்து ராஜமவுலி இயக்கத்தில் வெளியான பாகுபலி படத்தில் ராஜ மாதா கதாபாத்திரம் பெரும் புகழையும் பாராட்டையும் கொடுத்தது.
இந்நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது சினிமா அனுபவங்கள் குறித்து சமீபத்தில் பேசியுள்ளார். எதிர்பாராமல் சினிமாவிற்கு வந்த இவரது கனவு என்றால் பிரபல நடக கலைஞராக வேண்டும் என்பது தானாம்.
படையப்பா படத்தில் முக்கியமான கதாபாத்திரமான நீலாம்பரி வேடத்தில் நடிப்பதற்கு முதலில் மறுத்துவிட்டாராம். சௌந்தர்யா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க ஆசைப்பட்ட நிலையில், அதுவும் ரஜினிக்கு வில்லி என்றதும் விருப்பமே இல்லாமல் நடித்தாராம்.
படம் வெளியான முதல்நாளில் தனது தங்கை திரையரங்கு சென்று படம் பார்த்த போது, அங்கு ரசிகர்கள் ரம்யாகிருஷ்ணனின் நடிப்பினை பார்த்து செருப்பை கழற்றி வீச ஆரம்பித்தார்களாம்.
இதனை தங்கை வந்து கூறியதும், தனது கேரியர் முடிந்துவிட்டது என்ற நினைத்திருந்தவருக்கு, ஒருவாரம் கழித்து குறித்த கதாபாத்திரத்திற்கு கிடைத்த பெயரால் மகிழ்ச்சியடைந்தார்.
இப்போதும் நிறைய நடிகைகள் நீலாம்பரி போன்ற கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது என் கனவு என்று சொல்வதை கேட்க மகிழ்ச்சியாக உள்ளது என்று கூறிய ரம்யாகிருஷ்ணன், தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவருவதாக கூறியுள்ளார்.
