வனிதா சொன்ன அந்த வார்த்தையால் கோபத்தில் கத்திய ரம்யா கிருஷ்ணன்! வெடித்தது மோதல்? பரபரப்பு ப்ரொமோ
சமீபத்தில் தொடங்கப்பட்ட பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா விஜயகுமார்.
இந்நிகழ்ச்சிக்கு ரம்யா கிருஷ்ணன் மற்றும் நகுல் நடுவர்களாக இருக்கின்றனர்.
பிக்பாஸ் நட்சத்திரங்கள் மட்டுமே பங்கேற்கும் இந்நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் தன்னை அவமதித்துவிட்டதாக கூறி வனிதா விஜயகுமார் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார், இதற்கான காரணத்தையும் தெரிவித்தார்.
இந்நிலையில் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியின் புதிய புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.
அதில் காளி வேடம் போட்டு ஆடி முடித்த வனிதா ‘தன்னை மற்ற போட்டியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம்’ என கூறுகிறார்.
இதற்கு ரம்யா கிருஷ்ணன் ‘போட்டி என்றால் என்ன?, இரண்டு போட்டியாளர்களை ஒப்பிடக் கூடாது என நீங்கள் எப்படி சொல்லலாம்?’ என ஆவேசமாக கூறுகிறார்.
இதையடுத்து மைக்கை கொடுத்துவிட்டு வனிதா செட்டை விட்டு வெளியேறுகிறார். இந்த புரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.