சகிலா கேட்ட கேள்வி- யோசிக்காமல் மனம் திறந்த கிரன்.. என்ன சொல்லிருக்காரு பாருங்க
“பணத்திற்காக தான் இப்படியெல்லாம் செய்தாயா?” என சகிலா கேட்ட கேள்விக்கு நடிகை கிரண் கொடுத்த விளக்கம் சமூக வலைத்தளங்களில் பேசும் பொருளாக மாறியுள்ளது.
நடிகை கிரண்
விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி, அஜித் உடன் வில்லன் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கிரண் ரத்தோட்.
இவர், ஒருகட்டத்திற்கு பிறகு கிரணுக்கு பட வாய்ப்புகள் குறைந்து போன நிலையில் கடந்த பல வருடங்களாக எந்த படத்திலும் நடிக்காமல் இருக்கிறார்.
தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கிரண், இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்வார்.
மனம் திறந்த கிரண்
இந்த நிலையில், பிரபல யூடியூப் சேனலுக்கு அவர் கொடுத்த பேட்டியில், பணத்திற்காக தான் இப்படி கிளாமாராக புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை பகிர்ந்தாயா? என கேட்க, அதற்கு கிரண் சற்றும் கலக்கம் இல்லாமல், “ஆமாம், நான் மூன்று தடவைகள் திருமணம் செய்தேன்.
எனக்கு மூன்று குழந்தைகள் இருக்கிறார்கள். அப்படி இருந்தும் என்னுடைய தனிப்பட்ட விருப்பம் அதற்கு ஏன் இவ்வளவு பிரச்சினை எனக்கு தெரியவில்லை. சினிமாவில் இருக்கும் முன்னணி நடிகர்கள் கூட தான் கிளாமராக புகைப்படங்கள் போடுகிறார்கள். அவர்கள் ஏன் இந்த அளவு பேசப்படவில்லை என தெரியவில்லை” என கூறியுள்ளார்.
“கிரண் பேசுவதை வைத்து பார்க்கும் பொழுது கிரண் பற்றிய வதந்திகளுக்கும் அவர் செய்யும் வேலைகளுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லாதது போன்று தெரிகிறது..” என சகிலா தொடர்ந்து பேசுகிறார்கள்.
இந்த காணொளிகள் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW