Ethirneechal: நந்தினியை அடிக்கப் பாய்ந்த கதிர்! பரிதவித்து நிற்கும் பெண்கள்
எதிர்நீச்சல் சீரியலில் மகள் தாராவின் சடங்கு விடயத்தில் பேசிய நந்தினியை கதிர் அடிக்கப் பாய்ந்துள்ளார்.
எதிர்நீச்சல்
பிரபல ரிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியலின், இரண்டாவது பாகம் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றது.
அதாவது எதிர்நீச்சல் தொடர்கிறது என்ற தலைப்பில் ஒளிபரப்பாகிவரும் நிலையில், குறித்த சீரியலில் சில மாற்றங்களை மட்டுமே செய்து வருகின்றனர்.
முதல் பாகத்தை போன்று இரண்டாவது பாகத்திலும் வீட்டில் ஆண் ஆதிக்கம் தலையெடுத்து நிற்கின்றது. வெளியேறிய பெண்கள் தற்போது வீட்டிற்குள் வந்து கொடுமையை அனுபவித்து வருகின்றனர்.
தாராவின் சடங்கு விடயத்தில் நந்தினி எடுக்கும் முடிவினை கதிர் ஒப்புக்கொள்ளாமல் இருக்கின்றார். நந்தினியும் விடாமல் அந்த விடயத்தை பேசிக் கொண்டிருக்கும் நிலையில் கதிர் அடிக்க கை ஓங்கியுள்ளார்.
உடனே தனது அப்பாவை தாரா தடுத்து நிறுத்தியுள்ளார். நந்தினியின் கருத்தை கேட்டு கதிர் முடிவு எடுப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |