மனோஜ் இறப்புக்கு மாரடைப்பு காரணம் அல்ல: தம்பி ராமையா பகீர் தகவல்
“மனோஜ் கே பாரதிராஜாவின் இறப்புக்கு காரணம் மாரடைப்பு அல்ல.. இது தான்..” என நடிகர் தம்பி ராமையா பேசியது இணையவாசிகள் கவனத்திற்கு சென்றுள்ளது.
மனோஜ் பாரதிராஜா
“தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா.
இவர், பிரபல இயக்குநர், நடிகர் இமயம் பாரதிராஜாவின் மகன் ஆவார்.
மனோஜ் பாரதிராஜாவின் படங்கள் சரியாக ஓடவில்லை என்றாலும் அவர் முயற்சியை கைவிடாது, சினிமாவில் ஏதாவது ஒரு பணி செய்து கொண்டே இருந்தார்.
எப்படியாவது இயக்குநராக ஆகி விட வேண்டும் என்ற ஆசையில் அதற்காக பாரதிராஜா, மணிரத்னம், ஷங்கர் ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் பணியாற்றி வந்தார்.
மாரடைப்பு அல்ல இந்த நோய் தான்..
இந்த நிலையில், நேற்று முன் தினம் காலாமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரைத்துறை பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரின் மரணம் தொடர்பில் பல பிரபலங்கள் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த தம்பி ராமையா, “மனோஜ் தம்பி எழுந்ததற்கு மாரடைப்பு காரணம் அல்ல, அவரின் இறப்புக்கு காரணம் மன அழுத்தம் தான். ஒரு வெற்றி பெற்ற ஒரு இயக்குனரின் மகன் என்ற மிகப்பெரிய சுமையை சமூகம் அவர் மீது வைத்திருந்தது.
என்னப்பா அடுத்த படம் எப்போ.. என்ன பெரிய படம் ஏதும் இல்ல போல இருக்கு.. இப்படியான தொடர்ச்சியான கேள்விகளால் தம்பி மனோஜ் மிகப்பெரிய மன அழுத்தத்தில் இருந்தார்.
இதுவே அவருக்கு பெரிய சுமையாகி விட்டது. உன்னுடைய அப்பா இப்படி ஜெயித்து விட்டார்.. நீ ஜெயிக்கவில்லையா.. நீ எப்போது ஜெயிக்கப் போற இது போல பிள்ளைகள் மீது அந்த சுமையை தூக்கி வைக்க வேண்டாம்..” என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |