எளிமையாக நடந்த பிறந்த நாள் கொண்டாட்டம்- காணொளிக்கு குவியும் வாழ்த்துக்கள்
சின்னத்திரை நடிகை ஆல்யா மானசா ஹோட்டலில் மிக எளிமையாக மகன் பிறந்த நாளை கொண்டாடிய காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக உள்ளது.
சஞ்சீவ்– ஆல்யா
சின்னத்திரையில் பிரபலமாக இருக்கும் ஜோடிகள் தான் சஞ்சீவ்– ஆல்யா மானசா.
இவர்கள் ராஜா ராணி சீரியலில் ஜோடியாக நடிக்கும் பொழுது காதல் ஏற்பட்டு பின்னர் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு அழகான இரண்டு குழந்தைகளும் தற்போது இருக்கிறார்கள்.
இதனை தொடர்ந்து ஆல்யா பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய இனியா சீரியலில் நாயகியாக நடித்தார். மாறாக சஞ்சீவ் கயல் சீரியலில் நாயகனாக நடித்து வருகிறார்.
இவர்கள் இருவரும் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் தனியாக யூடியூப் சேனலொன்றையும் நடத்தி வருகிறார்கள். இவர்களின் காணொளிகளை பார்ப்பதற்காகவே தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றன.
மகன் பிறந்த நாள் கொண்டாட்டம்
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா- சஞ்சீவ் இருவரும் குடும்பத்தில் நடப்பவை அனைத்தையும் காணொளியாக பதிவேற்றுவது வழக்கம்.
அந்த வகையில், மகன் பிறந்த நாளை ஹோட்டலில் எளிமையாக கொண்டாடிய காணொளியை பகிர்ந்துள்ளனர்.
காணொளியை பார்த்த இணையவாசிகள், குழந்தைக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
