இந்த ராசியினர் சோம்பேறிகளாகவே பிறப்பெடுத்தவர்களாம்... யார் யார்ன்னு தெரியுமா?
பொதுவாகவே மனிதர்களாக பிறந்த ஒவ்வொருவருக்கும் ஒரு தனி சிறப்பு குணம் நிச்சயம் இருக்கும். அந்த குணம் சிலருக்கும் நேர்மறையாகவும் சிலருக்கு எதிர்மறையாகவும் அமைந்துவிடுவது இயல்பு.
ஆனால் ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் இவர்களின் சாதக மற்றும் பாதக குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்ப்பு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதீத சோம்பேறித்தனம் கொண்டவர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் இயல்பாகவே அதிக கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் அன்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால் சோம்பேறித்தனம் சிம்ம ராசியின் அதிகாரப்பூர்வ பலவீனமாக பட்டியலிடப்பட்டுள்ளது, இது இவர்களுக்கு மிகப்பெரும் பலவீனமாக இருக்கும்.
இவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஆசையை கொண்டிருக்கின்ற போதிலும் அவர்களின் சோம்பேறித்தனத்தால், இவர்களின் திறமைகள் பெரும்பாலும் மறைக்கப்படுகின்றது.
கும்பம்
கும்ப ராசியில் பிறந்தவர்கள் மிகவும் சோம்பேறி ராசிக்காரர்களில் ஒருவராக அடையாளப்படுத்தப்படுகின்றனர்.
இவர்கள் நேர்மையானவர்களாகவும் சிறந்த மனிதாபிமான குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
பிரச்சனை என்னவென்றால், உலகில் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்த விரும்பினாலும், இவர்களின் சோம்பேறித்தனத்தால் வாழ்க்கையில் பின்னோக்கியே இருப்பார்கள்.
தனுசு
தனுசு ராசியில் பிறந்தவர்கள் சாகச இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எந்த சூழ்நிலையிலும் தங்களின் சுதந்திரத்தை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள்.
இவர்கள் பொறுப்புகளை சுமக்கும் விடயத்தில் அதீத சோம்பேறியாக இருப்பார்கள். உறவுகளின் தேவைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமே இவர்களுக்கு வெறுப்பை உண்டாக்கும்.
அதற்கான இவர்கள் திறமையற்றவர்கள் என்று அர்த்தம் கிமையாது. இவர்களின் பொறுப்பற்ற குணம் இவர்களை சோம்பேறிகளாக மாற்றிவிடுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |