பிரச்சினை என்றாலே பயப்படும் ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசி என்ன?
ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசி மற்றும் நட்சத்திரத்துக்கும் அவர்களின் எதிர்கால வாழ்க்கை, தனித்துவமான குணங்களுக்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுவதாக நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்தவர்கள் இயல்பாகவே பிரச்சினைகளை கண்டு அச்சப்படும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி பிரச்சினை என்றாலே பதற்றமடையும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் போலியாக நடித்து கடினமான சூழ்நிலைகளை சமாளித்துவிடுவார்கள்.
ஆனால் பிரச்சினைகளை நேரடியாக எதிர்கொள்ளும்போது, பலம் இல்லாதவர்களாக இருப்பார்கள். இவர்களின் வாய் சொல்லில் இருக்கும் அசாத்திய தைரியம் பிரச்சினைகளை சந்திக்க வேண்டிய நிலையில் சுத்தமாக காணாமல் போய்விடும்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்கள் அமைதிக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் எப்போதும் அமைதியான மற்றும் மகிழ்ச்சியான சூழ்நிலைகளில் வாழ்வதை மட்டுமே விரும்புகின்றார்கள்.
இவர்கள் வாழ்க்கையில் நல்லிணக்கத்தை அதிகமாக விரும்புவார்கள். இவர்களால் பிரச்சினைகளை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாத நிலை காணப்படும். இவர்கள் பிரச்சினைகளுக்கு இயல்பாகவே பயப்படும் குணம் கொண்டவர்கள்.
மீனம்
மீன ராசியில் பிறந்தவர்கள் வாழ்வில் மோதல்கள் அல்லது பிரச்சனைகள் ஏற்படும் போது, அவற்றை நேரடியாக எதிர்கொள்வதற்கு பதிலாக ஒதுங்கி இருப்பதை அதிகம் விரும்புவார்கள்.
இவர்களுக்கு மற்றவர்களுடன் முறன்படுவது மற்றும் வாக்குவாதம் செய்வது போன்ற விடயங்களில் துளியளவும் ஆர்வம் இருக்காது.
இவர்கள் எப்போதும் கற்பனை உலகில் மகிழ்ச்சியாக இருப்பதையே அதிகம் விரும்புகின்றார்கள். அதனால் இவர்கள் பிரச்சினைகளை பெரும்பாலும் தவிர்த்துவிடுவார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
