சூர்யா வீட்டில் குவிந்த நடிகைகள்... காரணம் என்ன?
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா தங்கியிருக்கும் வீட்டிற்கு தமிழ் சினிமா நடிகைகள் பலரும் சென்று விருந்தில் கலந்து கொண்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகின்றது.
நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா
தமிழ் திரையுலகில் சூர்யா முன்னணி நடிகராகவும், மனைவி ஜோதிகா முன்னணி நடிகையாகவும் வலம்வருகின்றனர். இவர்க்ள இருவரும் 2006ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இன்றைய சினிமா ஜோடிகளுக்கு மட்டுமின்றி ரசிகர்களுக்கும் ரோல் மாடலாக இருந்து வருகின்றனர்.
வீட்டில் வைக்கப்பட்ட விருந்து
இந்நிலையில் சூர்யா வீட்டில் வைக்கப்பட்ட விருந்தில் பல நடிகைகள் கலந்து கெண்டுள்ளனர். திரிஷா, ரம்யா கிருஷ்ணன், ராதிகா சரத்குமார், விஜய் டிவி தொகுப்பாளினிகளான டிடி நீலகண்டன், விஜே ரம்யா, நடன இயக்குனர் பிருந்தா ஆகியோர் கலந்துகொண்டதுடன் ஒன்றாக புகைப்படமும் எடுத்துக் கொண்டனர்.
மேலும் கலந்து கொண்டவர்கள் அவர்களின் விருந்தோம்பலை பாராட்டி உள்ளதுடன், உணவும் அருமையாக இருந்ததாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றிய சூர்யா - ஜோதிகா இருவருக்கும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
நடிகை த்ரிஷா ஆறு படத்தில் சூர்யாவுடன் நடித்து 20 ஆண்டுகளாகி நிலையில், தற்போது சூர்யா 45 படத்தில் ஜோடியாக நடித்துள்ளார். இதற்காக பார்ட்டியா? அல்லது த்ரிஷா சமீபத்தில் தலையில் பூ வைத்தபடி காதல் குறித்து ஒரு பதிவு ஒன்றினை வெளியிட்டிருந்தார். ஒரு வேளை திரிஷாவுக்காக சூர்யாவும் ஜோதிகாவும் விருந்து வைத்தார்களா என்கிற கேள்வியும் எழத் தொடங்கி உள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |