உச்ச நடிகர்களை மிரட்டி வந்த வில்லன் நடிகர் திடீர் மரணம்: அதிர்ச்சியில் திரையுலகம்!
பல திரைப்படங்களில் வில்லனாக மிரட்டல் நடிப்பைக் கொடுத்த கசான் கான் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.
கசான் கான்
நடிகர் கசான் கான் தமிழில் 1992ஆம் ஆண்டு வெளியான செந்தமிழ்பாட்டு என்றத்திரைப்படத்தில் நடித்து சினிமாவிற்கு அறிமுகமானார்.
அததைத் தொடர்ந்து பல நடிக்க ஆரம்பித்த இவர் வில்லன் வேடம் பொருத்தமாக இருந்ததால் அதிலே தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார்.
சேதுபதி ஐபிஎஸ், மேட்டுக்குடி, வானத்தைப் போல, வல்லரசு, முறைமாமன் போன்ற திரைப்படங்களில் அப்போதைய காலத்தில் உச்சத்தில் இருந்த நடிகர்களுக்கு வில்லனாக நடித்திருந்தார்.
மேலும், விஜய் சிம்ரன் நடித்த பிரியமானவளே படத்திலும் வில்லனாக நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மரணம்
இந்நிலையில் நடிகர் கசான் கான் மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார். இந்த செய்தியை திரைப்பட தயாரிப்பாளரான பாதுஷா உறுதி படுத்தியிருக்கிறார். இதை தொடர்ந்து ரசிகர்கள், மற்றும் பிரபலங்கள் இவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |