பரிதாப நிலைக்கு தள்ளப்பட்ட பிரபல நடிகர்! இவருக்கு என்ன நோய் தெரியுமா?
பிரபல நடிகர் சரத்பாபு தீவிர சிகிச்சையில் இருப்பதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர சிகிச்சை
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் தான் சரத்பாபு.
தற்போது வீட்டிலிருந்தப்படி அவசரமாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில், தீவிர சிகிச்சையில் இருந்து வந்தார்.
இதனை தொடர்ந்து குறித்த நடிகருக்கு சிறுநீரகம், கல்லீரல், நுரையீரல் போன்ற முக்கிய உறுப்புகள் பாதித்துள்ளதால் அவருக்கு செப்சிஸ் நோயுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
மேலும் மருத்துவர்கள் மிகவும் கவனமாக சரத்பாபுவிற்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த தகவல் தமிழ் சினிமாவிற்கு மற்றுமொரு சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
எவ்வளவு நடிகர்கள் வந்தாலும் மக்கள் மத்தியில் பிரபல்யமாக இருந்த நடிகர்களின் இழப்பு சினிமாவிற்கு பேரிடியாக பார்க்கப்படுகிறது.