பிரபல வில்லன் நடிகர் மரணமா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை
பிரபல வில்லன் நடிகர் உயிரிழந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில், குறித்த வதந்திக்கு நடிகர் கோட்டா காணொளி வெளியிட்டு விளக்கம் கொடுத்துள்ளார்.
நடிகர் கோட்டா சீனிவாச ராவ்
ஆந்திராவைச் சேர்ந்த பிரபல நடிகர் கோட்டா சீனிவாச ராவ் தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர மற்றும் வில்லன் வேடத்தில் நடித்து மக்களிடையே பிரபலமானார்.
பின்பு தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவில் எண்ட்ரி கொடுத்து மாஸ் காட்டினார். குறிப்பாக விக்ரம் நடித்த சாமி படத்தில் அறிமுகமான இவர் வில்லான பயங்கர மாஸ் காட்டினார்.
இப்படத்தில் இவரின் வில்லன் கதாபாத்திரம் ஹீரோ கதாபாத்திரத்தையே ஓவர் டேக் செய்தது. இப்படத்தைத் தொடர்ந்து இவர் தமிழில் 'திருப்பாச்சி', 'கோ', 'சகுனி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இவர் இன்று காலை இறந்துவிட்டதாக சமூக வலைதளத்தில் தகவல் ஒன்று தீயாய் பரவிய நிலையில், குறித்த தகவல் வதந்தி என்றும், தான் நலமுடன் இருப்பதாக நடிகர் கோட்டா சீனிவாச ராவ் காணொளி வெளியிட்டுள்ளார்.