என்ன பேசுற? முதல்ல உன்னை உதைக்கணும்- தொகுப்பாளரை மிரட்டிய நடிகர்
தமிழ் சினிமாவையே கேவலமா பேசுறியா? முதல்ல உன்னை உதைக்கணும் என்று ஒரு சேனல் பேட்டியில் தொகுப்பாளரை நடிகர் ஜான் விஜய் மிரட்டிய தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
நடிகர் ஜான் விஜய்
தமிழில் துணை நடிகராக நடித்தே மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஜான் விஜய். இவர் 2006ம் ஆண்டிலிருந்து சினிமாவில் துணை நடிகராக நடித்து வருகிறார்.
‘வாயை மூடி பேசவும்’, ‘கலகலப்பு’ போன்ற படங்கள் இவருக்கு நல்ல அடையாளத்தை காட்டியது. இதனால், மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
பா.ரஞ்சித் இவருக்கு ‘கபாலி’, ‘சார்பாட்டா பரம்பரை’ போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரங்களை வழங்கினார்.
தொகுப்பாளரை மிரட்டிய பிரபல நடிகர்
இந்நிலையில், சமீபத்தில் ஜான் விஜய் பேட்டி கொடுத்தார்.
அந்தப் பேட்டியில், இயக்குநர் பா.ரஞ்சித்திற்கும் இவருக்குமிடையே உள்ள நட்பு பற்றி கேட்கப்பட்டது. அதற்கு ஜான் விஜய் பேசுகையில், இயக்குநர் பா.ரஞ்சித் எனக்கு தம்பி மாதிரி. அவர் இயக்கும் படங்களில் எனக்கு எப்போதும் வில்லன் கதாபாத்திரம் தரவே மாட்டார்.
அண்ணன் உனக்கு வில்லன் கதாபாத்திரம் எழுத தோண மாட்டேங்குது என்பார். இதனால், எனக்கு ரஞ்சித் படத்தில் நல்ல கதாபாத்திரங்களே அமையும். அப்போது பாலிவுட் சினிமாவையும், தமிழ் சினிமாவையும் தொகுப்பாளர் ஒப்பிட்டு பேசினார்.
அதனால், கடுப்பான ஜான் விஜய், என்ன தமிழ் சினிமாவையே கேவலமா பேசுறியா? முதல்ல உன்ன உதைக்கணும். எந்த ஊரு உனக்கு? என விளையாட்டாக மிரட்ட துவங்கினார். அதன் பிறகு அமைதியாகி சினிமாக்களிலேயே தமிழ் சினிமாதான் பெஸ்ட் என்றார்.