தான் பிறந்ததே மிகப்பெரிய தவறு என்று கூறிய நடிகர் கார்த்திக்
கனா காணும் காலங்கள், ஒபிஸ், செம்பருத்தி போன்ற கதைகள் மூலம் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் நடிகர் கார்த்திக்.
செம்பருத்தி சீரியலில் இருந்து விலகிய கார்த்திக், சொந்தமாக சினிமா எடுத்து, அதற்கு ரசிகர்களின் உதவியையும் கேட்டார். அந்தப் படம் வெற்றி பெறாததால், மீண்டும் ஜீ தமிழில் கார்த்திகை தீபம் சீரியலில் நடித்து வருகிறார்
தற்போது அந்த சீரியலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இதனிடையே சமூக ஊடகங்களில் கார்த்திக்கிற்கு நடிக்கத் தெரியவில்லை, எந்தவொரு எக்ஸ்ப்ரஷனும் கொடுக்கத் தெரியவில்லை என சில ஹேட்டர்ஸ் ட்ரோல் செய்தனர்.
இந்நிலையில் இவர் அண்மையில் பேட்டியொன்றில் கூறிய விடயம் வைரலாகி வருகின்றது.
அதில் “நீங்க லைப்ல பண்ணின பெரிய தப்பு என்றால் எதை சொல்வீங்க?” என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு அவர், “பிறந்திருக்கவே கூடாது. பிறக்காமல் இருந்திருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை. யாரும் நம்மகிட்ட எந்தவொரு விடயத்தையும் எதிர்பார்த்திருக்க மாட்டாங்க.
அதேசமயம் நாம் பண்ணும் எதையும் தப்பு என்றும் சொல்லியிருக்க மாட்டாங்க” என்று பதிலளித்துள்ளார்.