என் மனைவி குண்டா இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சினை? கடுப்பில் கவுதம் கார்த்திக்
என் மனைவி குண்டா இருந்தா உங்களுக்கு என்ன பிரச்சினை? என்று நடிகர் கவுதம் கார்த்திக் தெரிவித்துள்ளார்.
நடிகர் கவுதம் கார்த்திக்
பிரபல நடிகர் கார்த்திக்கின் மகன்தான் கவுதம் கார்த்திக். இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.
இதைத்தொடர்ந்து, ‘என்னமோ ஏதோ’, ‘வை ராஜா வை’, ‘ரங்கூன்’, ‘ஹர ஹர மஹாதேவகி’, ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’, ‘தேவராட்டம்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
திருமணம்
‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது நடிகர் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனுக்கும் காதல் மலர்ந்தது. இதனையடுத்து, இருவரும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர்.
கேலிக்கு உண்டான மஞ்சிமா
மஞ்சிமா மோகன் திருமணத்திற்கு முன்பே அவருடைய உடல் எடை அதிகரித்து விட்டது. இதை வைத்து இணையதளங்களில் அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர். திருமணத்திற்கு பிறகும் அந்த கேலி கிண்டல்கள் தொடர்ந்து வந்தது.
கடுப்பில் கவுதம் கார்த்திக்
இந்நிலையில் நடிகர் கவுதம் கார்த்திக் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தார்.
அதில் உங்களின் மனைவி உடல் எடை குறித்து வரும் கேலிகளுக்கு உங்கள் பதில் என்ன என்று தொகுப்பாளர் கேட்க,
அதற்கு கவுதம் கார்த்திக் பேசுகையில்,
என் மனைவி குண்டாக இருப்பதால் மற்றவர்களுக்கு என்ன பிரச்சனை. இதை பற்றி மஞ்சிமாவுக்கு எதுவும் சொல்லத்தேவை கிடையாது.
மஞ்சிமா மிகவும் தைரியசாலியான பெண். உடல் பருமன் குறித்த கேலி, கிண்டல்களை அவர் இப்போது எதிர்கொள்ளவில்லை. அவர் எப்போ குண்டானரோ அப்போதிலிருந்தே அதை எதிர்கொண்டு வருகிறார்.
தன் உடல் எடை குறித்து யாராவது ஏதாவது பேசினால், பாவம் அவர்களுக்கு கண்ணை தவிர வேறு எதுவுமே தெரியாது போல என்று கூறுவார்.
எனக்கு எது சந்தோஷமோ அதில்தான் மஞ்சிமா கவனம் செலுத்துவார். மஞ்சிமா ஆசைப்படும் அத்தனையும் நான் செய்ய விரும்புகிறேன். இதுதான் எனக்கு மகிழ்ச்சி என்றார்.