எனக்கு விருப்பம் இல்லை! தாலியை கழட்டினா என்ன தப்பு? பிக்பாஸ் அனிதா அதிரடி
தாலியை கழற்றுவதில் எந்த தவறும் இல்லை என பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத் தெரிவித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள அனிதா சம்பத் அவ்வப்போது தனது போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.
அனிதா சம்பத் தனது சமூக வலைதள பக்கத்தில் ஒரு போட்டோவை ஷேர் செய்தார். அந்த போட்டோவை பார்த்த நெட்டிசன் நெற்றியில் குங்குமம் வைத்தால் மேலும் ஒரு மடங்கு அழகாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
அதற்கு பதில் அளித்த அனிதா சம்பத், என் செய்தியை பார்ப்பவர்கள் எல்லா மதத்தையும் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு என் மதத்தை அடையாளப்படுத்துவதில் எனக்கு விருப்பம் இல்லை. குங்குமம், விபூதி, பூ, தாலி இவையெல்லாம் குறிப்பிட்ட மதத்தை குறிப்பவை.
எனவே அவற்றை நான் பின்பற்றுவதில்லை. யாவரும் கேளிர் என பதிவிட்டிருந்தார். மேலும் தாலியை கழற்றுவதில்லை. மறைத்துக்கொள்வேன். மதத்தை அடையாளப்படுத்த விரும்பாமல்தான்.
ஆனால் அப்படியே கழற்றினாலும் அதில் எந்த தவறும் இல்லை என்று தெரிவித்துள்ளார். அனிதா சம்பத்தின் இந்த பதிவு ஒரு சில ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.