செல்போனில் கடல போடும் அம்மாவை பார்த்து கடுப்பான ஜெயம்ரவி மகன்கள்! ஷாக்கில் நெட்டிசன்கள்
செல்போனில் கடல போடும் அம்மாவை பார்த்து கடுப்பான ஜெயம் ரவி மகன்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
தமிழ் சினிமாவில் முன்னணியில் இருக்கும் நடிகர்களில் ஒருவர் தான் ஜெயம் ரவி.
இவர் நடித்த ஜெயம் திரைப்படம் மக்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றதால் ரவியை ஜெயம் ரவி என்று தான் அனைவரும் அழைப்பார்கள்.
இவர் நடிப்பில் கடைசியாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகியது இதில் கதாநாயகனாக கலக்கியிருப்பார்.
இந்த நிலையில் நடிகர் ரவி கடந்த 2009 ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மகன்கள் முன்னர் கடலை போடும் ஆர்த்தி
இவர்களுக்கு அழகிய இரண்டு மகன்கள் இருக்கிறார்கள். இருவரில் மூத்த மகன் தான் “டிக் டிக் டிக்” என்ற படத்தில் நடித்திருப்பார்.
அந்த வகையில் சினிமாவில் ரவி, எவ்வளவு பிஸியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகின்றார்.
தற்போது குழந்தைகளுடன் ஆர்த்தி ரவி இருக்கும் புகைப்படங்களை முகப்புத்தகங்களில் பகிர்ந்துள்ளார். இதில் பார்க்கும் போது ஆர்த்தி செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறார்.
இதனை பார்த்த மகன்கள் கொஞ்சம் கடுப்பாகியுள்ளார்கள்.
புகைப்படங்களை பார்த்த இணையவாசிகள், “ இரண்டு பிள்ளைகளை வைத்து கொண்டு இது தேவையா?” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |