ஆசை ஆசையாய் காதலித்து திருமணம்... சில ஆண்டுகளில் விவாகரத்து பெற்ற சீரியல் பிரபலங்கள்..
சீரியலில் நடிக்கும் பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து சில பிரபலங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தாலும், சில ஜோடிகள் சில மாதங்களில் பிரிந்து விவாகரத்து வரையும் சென்றுள்ளனர். அந்த வகையில் காதலித்து திருமணம் செய்து விவாகரத்து பெற்ற ஜோடிகளை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
விஷ்ணுகாந்த் சம்யுக்தா
இருவரும் சீரியல் பிரபலங்களான நிலையில் கடந்த மார்ச் மாதம் 3ம் தேதி திருமணம் செய்து ஒரே மாதத்தில் வாக்குவாதம் ஏற்பட்டு தற்போது விவாகரத்து வரை சென்றுள்ளனர். மேலும் இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை விடயம் மீடியா வரை வந்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ரச்சிதா தினேஷ்
இந்த ஜோடிகளும் சீரியல் மூலம் அறிமுகமாகி காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆனால் சில ஆண்டுகளில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர். சமீபத்தில் ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக ரச்சிதா காவல்நிலையம் வரை சென்றது குறிப்பிடத்தக்கது.
திவ்யா அர்னவ்
செவ்வந்தி சீரியல் நடிகையான திவ்யா, சக நடிகரான அர்னவ்வை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்ததுடன், இந்த ஜோடிகளுக்கு தற்போது குழந்தையும் பிறந்துள்ளது. ஆனால் குழந்தை வயிற்றில் இருக்கும்போதே இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினை இறுதியில் விவாகரத்து வரை சென்றதுடன், மீடியாவிற்கும் வந்து ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அர்னவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
விக்னேஷ் ஹரிப்பிரியா
வாணி ராணி சீரியலில் நடித்த விக்னேஷ், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் ஹரிபிரியா இருவரும் காதலித்து திருமணம் செய்து சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து இறுதியில் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்தனர்.
ஜெயஸ்ரீ ஈஸ்வர்
சீரியல் பிரபலங்களான ஜெயஸ்ரீ தனது கணவர் ஈஸ்வர், நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாக கூறி சர்ச்சையானதையடுத்து இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஆனால் மகாலட்சுமி தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டு தற்போது மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |