மனைவியிடம் தோற்றுப் போன ஜெயம் ரவி: வைரலாகும் வீடியோ காட்சிகள்
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம்ரவி, அவரது மனைவியிடம் தோற்றுப் போன வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. தமிழ் திரையுலகில் மிகச்சிறந்த கதைகளை தேர்ந்தெடுத்து அசத்தி வருகிறார் ஜெயம் ரவி, சமீபத்தில் கூட இவரது படமான பூமி கலவையான விமர்சனங்களை பெற்றது.
இந்நிலையில் ஜெயம் ரவி தனது சமூக வலைத்தள பக்கத்தில் மனைவி ஆர்த்தி ரவியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மனைவியின் உடற்பயிற்சி சவாலை ஏற்றுக் கொண்ட ரவி அதை, செய்ய முடியாமல் தோற்கிறார்.
இந்த அழகான வீடியோவிற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து கமண்ட் செய்து வருகிறார்கள். அதில், "பெண்கள் எதையும் செய்யலாம். உங்கள் அன்புக்குரியவருடன் இதை முயற்சிக்கவும்! நீங்கள் வலுவான பெண்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.