தமிழ்நாட்டில் அசைவமே உண்ணாத மக்கள் உள்ள கிராமம் - பின்னணி காரணம் என்ன?
தமிழ்நாட்டில் உள்ள ஒரு கிராமத்தில் அசைவமே சாப்பிட மாட்டார்கள் என கூறப்படுகின்றது. இதன் பின்னணி காரணத்தை பற்றி பதிவில் பார்கலாம்.
அசைவம் உண்ணாத கிராமம்
தமிழ் நாட்டின் நீலகிரி மாவட்டம் மலைகளின் அரசியாக அழைக்கப்படுகின்றது. இங்கு பல சுற்றுலா பயணிகள் ஈர்க்கப்படுகின்றனர். அங்குள்ள பழங்குடியின மக்கள் வாழும் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக இருக்கிறது.
பொதுவாக நாம் வாழும் ஒவ்வொரு இடங்களுக்கு ஏற்ப வாழ்க்கை முறைகள் உணவு பழக்க வழக்கங்கள் மற்றும் மக்களின் வாழ்வியல் முறைகள் வேறுபடும்.

அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் சுமார் 300 கிராமங்களுக்கு மேல் வசித்து வரும் படுகர் சமுதாய மக்களின் வாழ்வியல் முறைகள் பல சிறப்புக்களை கொண்டுள்ளது.
அங்கு காணப்படும் நீலகிரியில் தீனட்டி, அஜ்ஜூர், மணியட்டி, புதுஹட்டி போன்ற கிராமங்களில் அசைவ உணவுகள் சாப்பிடுவதில்லை என கூறப்படகின்றது.

இவர்கள் இவர்களின் முன்னோர்களை பின்பற்றி சைவ உணவுகளை மட்டும் தான் சாப்பிடுகிறார்கள் என கூறப்படுகின்றது. இங்கு சைவ உணவுகள் சாப்பிடும் மக்கள் தாங்கள் மிகவும் ஆரோக்கியமாக வாழ்கின்றனர் என கூறுகின்றனர்.
இவர்கள் சைவ உணவுகள் சாப்பிடுவதற்கான காரணம் இவர்கள் முன்னோர் காலத்தில் இருந்து சிவனடியார்களுடன் வாழ்ந்தது தான் என கூறுகின்றனர்.
இதனால் இயன்றளவு மூதாதையர் போல வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் சைவ உணவை பின்பற்றுகிறார்கள் என கூறப்படுகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |